பக்கம்:சிலம்புத் தேன்.pdf/52

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

சிலம்பின் புகழ் 43

காணப்படும் குறிப்பேயாகும். இன்றைய சூழ்நிலையில் அரும்பத உரையும் அடியார்க்கு நல்லார் உரையும் இல்லையேல், அவற்றிற்கு உண்மைப் பொருள் காணல் இயலாது. அத்தகையதொரு தீங்கு தமிழ் மக்களைச் சாராமல் தடுத்தாண்ட பெருமை அரும்பத உரையாசிரியரின் தனி உரிமை. இசை நாடகப் பகுதிகளுக்கு உரை கூறிய வகையில் அடியார்க்கு நல்லாரும் இவருக்குக் கடன் பட்டவர். ...வேனிற் காதையில் அகநிலை மருதம், புறநிலை மருதம், அருகியல் மருதம், பெருகியல் மருதம்’ என்பவற்றிற்கு அரும்பத உரையாசிரியர் இலக்கணமும் பாட்டும் மாத்திரையும் காட்டியிருப்பதும், அடியார்க்கு நல்லார் அவற்றை வாளா விட்டிருப்பதும் அறியற் பாலன. அரும்பத உரையாசிரியரும் அடி யார்க்கு நல்லாரும் மாறுபட எழுதியிருக்கும் உரைகளே ஆராய்வுழிச் சில இடங்களில் அரும்பதவுரையே பொருத்தமுடையதாகக் காணப் படுகிறது. ........சிலப்பதிகாரம் முழுதிற்கும் ஒரு வாறு பொருள் தெரிந்துகொள்ள இவ்வரும் பதவுரையே கருவியாயிருந்தது. தலைசிறந்த தமிழ்ப் பேரறிஞர் ஒருவரது இலக்கிய மதிப்பீடு இது."12 சிலம்பின் ஒளியையும் அவ்வொளியின் கருணையால் விபுலானந்தர் வரைந்த யாழ் நூலையும் அவரனைய சான்றோரின் முயற்சியால் ஆலமரம் போல இன்று விழுதுக ள் விட்டு வளர்ந்திருக்கும் தமிழிசை இயக்கம் முதலியவற்றையும்