பக்கம்:சிலம்புத் தேன்.pdf/64

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சிலம்பின் புகழ் 55

பதிகாரத்தைச் சிறந்த முறையில் பதிப்பித்து வெளியிட்டதும் தமிழ் ஆராய்ச்சி அறிஞர் களின் கண்கள் வியப்பால் அகன்றன. அவர் களுள் கலை சிறந்தவர், ஈழ நாட்டுப் பேரறிஞர் திரு. கனகசபைப் பிள்ளை அவர்களே. 1800 ஆண்டுகட்கு முன் தமிழர் பற்றி அப்பெரியார் 1900-ஆம் ஆண்டில் ஆங்கிலத்தில் எழுதி வெளி யிட்ட நூல் பழந்தமிழர் பெருமையைக் குன் றின் மேல் இட்ட விளக்காக்கிற்று."

சிலப்பதிகார வெளியீடு தமிழக வரலாற் றிற்குப் பெருந்துணே புரிந்த உண்மை திரு. கனகசபைப் பிள்ளை அவர்களின் ஆங்கில நூலால் விளங்குவது போன்றே மகாவித்துவான் திரு. மு. இராகவையங்கார் அவர்களின் சேரன் செங் குட்டுவன்' என்ற தமிழ் நூலாலும் இனிது புலகுைம்.

இளங்கோ படைத்த இலக்கியம் பழந்தமிழ் இசை பற்றிய உண்மைகளின் கருவூலம். அந்த உண்மையை உலகறியச் செய்த பெருமை தவத்திரு விபுலானந்த அடிகளாரின் தனியுரிமை. சிலப்பதிகாரத்தோடு சேர்த்து வைத்துப் போற்றி வழிபட்டுப் பயன் கொள்ளத்தக்க ஒரு நூல்-சிலப்பதிகாரத் தொடர்புடைய ஆராய்ச்சி நூல் - விபுலானந்தர் பெருமான் 1947-ஆம் ஆண்டில் வெளியிட்டருளிய யாழ் நூல் ஆகும். அப்பெருநூலின் பாயிரவிய லில் விபுலானந்த அடிகளார். தம் சிலப்பதிகாரகடு

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சிலம்புத்_தேன்.pdf/64&oldid=560617" இலிருந்து மீள்விக்கப்பட்டது