பக்கம்:சிலம்புநெறி.pdf/39

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சிலம்பு நெறி ( 37

"நாளை' என்னும் நாள் யார் கையில் இருக்கிறது? இஃது இயற்கையில் தெரியாத ஒரு புதிராகவே இருந்து வருகிறது. அதனால் இறப்பு உணர்ச்சி மேலிட்டு அழுது மடிவதா? கூடாது.

வாழ்வதற்கே பிறந்த நல்லுயிர்கள் மரணத்தில் அழிந்து போகக் கூடாது. மரணத்தைக் காட்டிப் பயமுறுத்துவதற்காக நிலையாமையை எ டு த் து க் கூறுவதில்லை. மரணத்தைக் கண்டு அஞ்சிச் சாகிறவர் கள் கோழைகள்; வாழத் தெரியாதவர்கள்.

பின் ஏன் மரணத்தைப் பற்றிய எண்ணம்? கல்வி, ஞானம், தொண்டு, அறம், ஆகியவற்றிற்கு ஒவ்வொரு விநாடியும் கடைசி விநாடியே என்று கருதிச் செய்து வாழ்தல் நல்ல மரபு.

கல்வியை இன்றே கற்க வேண்டும். நல்ல நூல்களை நாடிக் கற்க வேண்டும். பெறுதற்கரிய ஞானத்தை இன்றே, இப்பொழுதே பெறவேண்டும். தொண்டு இப்பொழுதே செய்க. சிந்தித்தால் வாய்ப்பு இழக்கவும் நேரிடலாம். இந்த உயர் நோக்கத்தோடு சொல்லப் பெற்ற நிலையாமைக் கருத்து, எதிர்காலத்துச் சிந்தனையே இல்லாமல் செய்துவிட்டது ஒரு பெரிய குறை.

நிலையாமை உணர்வு அறம் செய்தற்குத் தூண்டு கோலேயன்றி, எதிர்காலச் சிந்தனைகளை, திட்டங்களை இழப்பதற்கன்று. இத்தகு உயரிய கருத்தினைச் செங்குட்டுவனிடம் மாடல மறையோன் கூறுவதாக சிலப்பதிகாரம் உணர்த்துகின்றது. - 'காளைச் செய்குவம் அறழெனின் இன்றே கேள்வி நல்லுயிர் நீங்கினும் நீங்கும் இதுவென வரைந்து வாழுகா ளுணர்ந்தோர் முதுநீர் உலகில் முழுவதுமில்லை. ... • -

(சிலம்பு. நடுகல். 179-182) [] [] []

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சிலம்புநெறி.pdf/39&oldid=702702" இலிருந்து மீள்விக்கப்பட்டது