பக்கம்:சிலம்புநெறி.pdf/47

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சிலம்பு நெறி - 45

அவற்றின் அழிவுகளிலிருந்து தற்காத்துக் கொள்ளும் முயற்சியில் வெற்றி பெற்றுவரும் விஞ்ஞான உலகத்தை நாம் மறுக்க முடியாதல்லவா? மனித இயலும் ஒரு விஞ்ஞானம் தான்ே!

நேற்றைய வாழ்க்கையின் பயனாகிய ஊழ், இன்றைய வாழ்க்கையின் தொடக்கமாகும். ஊழ் சித்தம், புத்தி, மனம் வழியாகப் பரிணமித்து எண்ணங்களாக வந்து மனிதனின் செயலூக்கியாக இடம் பெறும்.

மனம், இயல்பாக யாதான்ும் ஒன்றைப் பற்றிக் கொண்டேயிருக்கும் இயல்பினது. அங்ங்ணம் மனம் பற்றும் பற்றின் வாயிலையே, எண்ணமும் ஏற்றுக் கொண்டு இயங்கக் கூடும். இங்ங்னம் செயற்படும் பொழுது பற்றிய பொருளின் அமைப்பிலேயே செயற். படாது. பற்றப் பெற்றது மிகச் சிறந்ததாயினும் ஊழ் கறைப்படுத்த இயலும்; கறைப்படுத்தக் கூடும்.

சாதாரணமாக நல்லோருடன் பழகும் வாய்ப்புக் கிடைத்து அவருடன் பழகினாலும் அந்நன்மையை எடுத்துக் கொள்ளாமல், அந் நன்மையையும். தீமையாக்கிக் கொள்வது போலச் செல்லுழிச் செல்லும் மனம் தொழிற் படும்.

அதாவது நல்லோருடனும் கூட, முழுமையாக, ஈடுபாட்டுடன் உளம் ஒன்றிப் பழகாமல் இருப்பது. -ஏதோ ஒரு காரியத்தை அடையும் நோக்கத்தில் -பயன் படுத்திக் கொள்ளும் நோக்கத்தில் புகுவது.

பயன்படுதல் வாழ்க்கையின் நியதி, வாழ்க்கையில் தவிர்க்க முடியாத தேவை. ஆனால் பயன்படுத் திக் கொள்ளுதலைவிட பயன்படும் நிலையில் அமைதலே நன்று. பயன்படுத்திக் கொள்ளுதலில் செயற்கையும்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சிலம்புநெறி.pdf/47&oldid=702710" இலிருந்து மீள்விக்கப்பட்டது