பக்கம்:சிலம்புநெறி.pdf/74

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

4. கண்ணகியின் கற்பு

இளங்கோவடிகள் சிலப்பதிகாரத்தைச் செய்த நோக்கங்களுள் ஒன்று. உரைசால் பத்தினிக்கு உயர்ந் தோர் ஏத்தலும்” என்பது. பெண்ணுக்குப் புகழ், கற்பு. புகழ் மிக்க, கற்புடைய பெண்ணை, உலக மக்கள் பாராட்டுவர். அமரர்கள் போற்றுவர்.

கற்பு என்பது என்ன? இதற்கு, பலர் பலவாறு பொருள் கொண்டுள்ளனர். கொன்றை வேந்தன் ஆசிரியர், 'கற்பெனப்படுவது சொல் திறம்பாமை' என்று கூறியுள்ளார். அதாவது, கணவன் சொல்லுக்கு எதிராகச் சொல்லாதிருத்தல், என்று கூறுவர். இக்கருத்து சிறந்த மனையற வாழ்க்கைக்கு ஏற்புடையதாக இருக்க முடியாது.

கணவன் சொல்வது தவறாக இருக்குமானால், பெண் அந்தத் தவற்றுக்கு உடந்தையாக இருந்து கணவனுக்குக் கேடு சூழ்வதை எப்படி கற்பு என்று ஏற்றுக் கொள்ள முடியும்?

. கணவனுக்கும், தனக்கும், இருவரும் சார்ந்த குடும்பத்திற்கும், குடும்பத்திற்குக் களமாக இருக்கும் சமுதாயத்திற்கும், நலம் பயக்கின்றவாறு, வாழ்வதும், கணவனின் வாழ்க்கையை அந்த வாழ்க்கையில் நிலை

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சிலம்புநெறி.pdf/74&oldid=702737" இலிருந்து மீள்விக்கப்பட்டது