பக்கம்:சிலம்புநெறி.pdf/94

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

92 - தவத்திரு குன்றக்குடி அடிகளார்

அதனால் தான்் கண்ணகிக்கு, பாண்டியனின் குற்றத்தைத் தாங்கிப் பொறுத்துக்கொள்ள முடியாத, சினம் ஏற்பட்டது. அப்படியானால் பாண்டியன் நெடுஞ் செழியன் உயிரைத் தான்் கொண்டாயிற்றே! மீண்டும் மதுரையின் மீது, ஏன் சினம்?

இளங்கோவடிகள் முடியைத் துறந்து மக்களை நாடி மக்களுள் ஒருவராகி, கண்ணகியின் காற்சிலம்பை முதலாகக் கொண்டு காப்பியம் செய்தவர். ஆதலால் காப்பியப் போக்கிலும் அரசியலில் மக்களுக்குரிய பங்கை வற்புறுத்த எண்ணுகிறார்.

நாட்டு மக்கள் நல்ல அரசை விரும்ப வேண்டும். நாட்டை ஆள்வோர் கள்ளுக் கடைகளைத் திறந்தா லென்ன? மூடினால் என்ன? கடன் வாங்கினால் என்ன? கொடுத்தால் என்ன? கமிஷன்' வந்தால் என்ன? போனால் என்ன? என்று ஏனோ தான்ோ என்று: நினைக்கக் கூடாது.

நாட்டு மக்கள், நல்லவர்களாக இல்லாதுபோனால் அந்த நாட்டில் நல்லாட்சி அமையாது; அமையமுடியாது. எனவே, ஓர் அரசின் சிறப்புக்கு அந்த நாட்டு மக்களின் நடத்தையும் காரணம் என்று கண்ணகி வாயிலாக இளங்கோவடிகள் உணர்த்துகின்றார். அதனால், பாண்டியன் செய்த தவறு திடீரென்று விளைந்ததன்று. என்று கண்ணகி ஓர்கிறாள்.

ஒரு மனிதனிடத்தில் குற்றம் திடீரென்று தோன்றி. விடாது. அதற்கொரு வரலாறு இருக்கும். அந்தக் குற்றத்தை வளர்த்த வர்கள் இருப்பார்கள் என்பதே. உண்மை. பாண்டியன் தன் அமைச்சர்களிடத்தில் கலந்து ஆராயாமல் "கொன்று அச்சிலம்பைக் கொணர்க!...” என்றது தன்னிச்சையான வாக்கு.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சிலம்புநெறி.pdf/94&oldid=702757" இலிருந்து மீள்விக்கப்பட்டது