பக்கம்:சிலம்போ சிலம்பு.pdf/117

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

சிலம்போ சிலம்பு!

113


படை மறவர்கள் தம் வேந்தன் வெற்றி பெறுவதற்காகத் தம் உயிரைப் பலி கொடுப்பது உண்டு:

"வெற்றி வேந்தன் கொற்றம் கொள்கென
நற்பலி பீடிகை நலங்கொள வைத்தாங்கு

உயிர்ப்பலி உண்ணும் உருமுக்குரல் முழக்கத்து" (5:85-87)

குழந்தை பிறந்த ஐந்தாம் நாள் பிறப்புத் திட்டு கழித்துப் பின் பெயர் சூட்டு விழா நடத்துவர். மாதவிக்கு மணிமேகலை பிறந்தபின், இவ்வாறு நடைபெற்றது. பாடல்:

"மாந்தளிர் மேனி மாதவி மடங்தை
பால்வாய்க் குழவி பயங்தனள் எடுத்து
வாலாம் ஐந்நாள் நீங்கிய பின்னர்
மாமுது கணிகையர் மாதவி மகட்கு

நாம நல்லுரை நாட்டுதும் என்று..." (15:22-26)

என்பது பாடல் பகுதி.

யானைக்கு முன்னே, யானை வருகிறது என்று மக்களை விழிப்பாயிருக்கச் செய்யப் பறை அறைந்து அறிவிப்பது உண்டு:

"அரசுஉவா தடக்கையின் பரசினர் கொண்டு
முரசு எழுந்து இயம்ப" (3:124, 125)

"பாகுகழித்து யாங்கனும் பறைபட வரூஉம்

வேக யானை வெம்மையின் கைக்கொள" (15:46, 47)

ஒரு சிலர்க்கு 'எட்டி' என்னும் பட்டம் அளிப்பது உண்டு: சாயலன் என்பவன் எட்டிப் பட்டம் பெற்றவன்.

சிலர் உள்ளத்தில் பெருந்துயருற்றுச் சோர்ந்திருக்கும் போது, யாராவது அவர்களைப் பார்த்து 'ஏன் என்னவோ போல் இருக்கிறீர்கள்?' என்று கேட்கின், "ஒன்றுமில்லை, இலேசா தலையை வலிக்கிறது" என்று பொய் சொல்லி