பக்கம்:சிலம்போ சிலம்பு.pdf/179

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

சிலம்போ சிலம்பு!

175


"பேதுறவு மொழிந்தனள் மூதறி வாட்டி என்று
அரும்பெறல் கணவன் பெரும் புறத்து ஒடுங்கி
விருந்தின் மூரல் அரும்பி நிற்ப" (12:51-53)

பல்லாண்டு கடந்தபின் மீண்டும் அரிதாக அடைந்த கணவன் ஆதலின் அரும்பெறல் கணவன்’ எனப்பட்டது. "விருந்தே புதுமை" என்பது ஒரு வழக்கு. கண்ணகி சிரித்து நீண்ட நாள் ஆனதால், இதை 'விருந்தின் மூரல்' என்றார். 'பெண் சிரித்தால் போயிற்று - புகையிலை விரித்தால் போயிற்று' என்பது அந்தக் காலப் பழமொழி. எனவேதான், பெரிய அளவில் சிரிக்கவில்லை - சிரிப்பு அரும்பு நிலையிலேயே இருந்தது என்னும் கருத்தில் அரும்பி நிற்ப எனப்பட்டது. கண்ணகியின் மென்மைக்கு இதுவும் சான்று.

7. மாதரியின் வீட்டில், கண்ணகி கணவற்காக உணவு ஆக்கி, கணவனது காலைத் தூய்மை செய்து தடுக்கு இட்டு இருக்கச் செய்து நல்ல வாழையிலை போட்டு உணவு பரிமாறி 'அமுதம் உண்க அடிகள்' என அன்போடு உரைத்தாள்.

8. கோவலன் கண்ணகியை நோக்கி, எழு என்றதும் எழுந்து வந்தனை, உனக்கு யான் ஒரு நன்மையும் செய்யவில்லை - என்றபோது, கண்ணகி தனக்காக வருந்தாமல், பிறர்க்கு விருந்து படைத்தல் முதலிய உதவிகளைச் செய்ய முடியாது போனமைக்கு வருந்தியதாகக் கூறினாள்.

9. கண்ணகி, தன் மாமனாரும் மாமியாரும் தனக்காக வருந்தாதிருக்கும்படி, நான் மகிழ்ச்சியாகவே உள்ளேன் என்று அவர்கட்கு அறிவிப்பதற்காகப் பொய்ச் சிரிப்பு சிரித்துக் கொண்டிருந்தாளாம்.

10. கண்ணகி உண்டு முடித்த கணவனுக்கு வெற்றிலை பாக்கு அளித்து அன்புக் கடமையின் உயரிய எல்லையில் நின்றாள். கோவலன், சிலம்பு கொண்டு கடைத்தெருவிற்குப்