பக்கம்:சிலம்போ சிலம்பு.pdf/208

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

204

சுந்தர சண்முகனார்


காதம் நான்கும் கடுங்குரல் எழுப்பிப்

பூதம் புடைத்துனும் பூத சதுக்கமும்” (5:128-134)

என்பது பாடல் பகுதி. இந்தப் பூதந்தான், ஒரு நல்ல பெண்ணைக் கற்புக் கெட்டுவிட்டாள் என அவளின் கணவனிடம் கூறி நம்ப வைத்தவனைக் கொன்றது.

அறிவியல் முறைப்படி நோக்கின், இது உண்மையாயிருக்க முடியுமா? உண்மையாயின், ஊர் - உலகத்தில் தீயவர் ஒருவரும் இருக்க முடியாதே. இது உண்மையாயின், இப்போது உலகில் இருக்கும் தீயவர்களைப் புடைத்துக் கொல்ல ஒரு பூதம் போதாதே - ஒரு கோடி பூதமாவது தேவையாயிற்றே. மக்கள் தொகையைக் கட்டுப்படுத்த என்னென்ன விளம்பரமோ செய்கிறார்களே. இந்தப் பூதங்களைத் தேடிப் பிடித்துக்கொண்டு வந்தால் போதுமே!

இது உண்மையோ - பொய்யோ! அந்தக் காலத்தில் இது நடந்திருக்குமோ - இராதோ - இதிலிருந்து நாம் எடுத்துக் கொள்ள வேண்டியதாவது: இந்தக் காலத்தில் இத்தகைய குற்றவாளிகள் ஒறுக்கப்படாமல் எப்படியோ தப்பித்துக் கொள்கிறார்கள். இவர்களை வாளா விடாமல் தேடிப் பிடித்துத் தக்க ஒறுப்பு தரவேண்டும் என்பதாகும்.

அருங்கலை ஆர்வலன்

கோவலன் புறஞ்சேரியில் தங்கியிருந்தபொழுது ஆங்கு வந்த பாணர்களுடன் சேர்ந்து கொண்டு, யாழ் மீட்டி இசைக் கலை நுட்பம் வழுவாமல் வாசித்தானாம். இதனால் அவன் அருங்கலை ஆர்வலன் என்பது புலனாகும்.

“பாடும் பாணரின் பாங்குறச் சேர்ந்து... (105)

பாடல் பாணி அளைஇ அவரொடு (113)”

என்பது பாடல் பகுதி. கோவலன் பாணர்களை நோக்கி, மதுரை இன்னும் எவ்வளவு தொலைவு உள்ளது என்று வினவினானாம். மதுரைக் காற்று வரத் தொடங்கி