பக்கம்:சிலம்போ சிலம்பு.pdf/211

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

சிலம்போ சிலம்பு

207


கவுந்திக்கும், கண்ணகிக்கும் தெரிவிக்காதே என்று சொல்லிச் சென்றதாம். இது ஒருவகைப் பெண்மை இயல்புபோலும்!

கானுறை தெய்வத்திற்குக் கோவலன் இளப்பமாய்த் தோன்றியிருக்கிறான். அதாவது - இவன் காமவேட்கை கொண்டவன் - கண்ணகியை விட்டு மாதவி பின்னால் திரிந்தவன் - வயந்த மாலையையும் ஒரு கை பார்த்திருப்பான் - அதனால் நமக்கும் இவன் படிவான் - என அத்தெய்வம் எண்ணியிருக்கிறது. ஒரு முறை கெட்ட பெயர் எடுத்துவிடின், அது மறையாது - மறைவதானாலும் நீண்ட காலம் பிடிக்கும் என்பது இதனால் புலப்படும். மறைமொழி உருவேற்றி வென்றானாம். தெய்வம் வயந்தமாலையின் உரு எடுத்தது - இவனை மயக்கிற்று - இவன் மறைமொழியால் வென்றான் - என்னும் செய்திகளைப் பகுத்தறிவாளர் - அறிவியலார் நம்புவது கடினம். இது அந்தக் காலக் காப்பிய நீரோட்டமாகும். இந்தச் செய்தி காடு காண் காதையில் சொல்லப்பட்டுள்ளது.

தனது நீர் வேட்கையைத் தவிர்த்துக் கொண்ட கோவலன் மனைவியை மறக்கவில்லை. காட்டிலே ஆண் மான், ஓரிடத்தில் சிறிதளவு இருந்த தண்ணீர் தனக்கும் பெண் மானுக்கும் போதாது என்று எண்ணித் தான் பருகி விட்டது போல் நடித்துப் பெண் மானைப் பருகச் செய்த பிணைப்பும் களிறு பிடிக்குச் செய்த உதவியும் தமிழிலக்கியங்களில் தண்ணீர் பட்ட பாடு. மானே அங்கனமெனில், கோவலன் மறப்பானா? ஒரு தாமரை இலையைச் சுருட்டி மடக்கிக் குவளை போல் செய்து அதில் தண்ணீர் கொண்டு போய்க் கண்ணகிக்குத் தந்தானாம். இதை எழுதிய இளங்கோவடிகள், கோவலன் கவுந்தியடிகட்குத் தண்ணீர் கொடுத்ததாகச் சொல்லாமையால், கோவலன் குறைபாடு உடையவனா அல்லது கவுந்தியடிகள் தேவையில்லை என்று