பக்கம்:சிலம்போ சிலம்பு.pdf/235

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

சிலம்போ சிலம்பு!

231


நாண் (தாலி) ஒன்றே அவள் நன்மங்கலி என்பதை அறிவித்துக் கொண்டிருந்தது. ‘தவள வாள் நகை’ என்பது, கோவலன் எதிரில் மட்டும் சிரிக்கக் கூடியவள் என்பதை அறிவிக்கிறது. புணர்ச்சியின்போது முகத்தில் வியர்வை தோன்றும்; இப்போது புணர்ச்சி இன்மையின் முகம் வியர்வையை அறியவில்லை. அந்தக் காலத்தில் கணவன் பிரிந்த கற்புடைய மங்கைக்கு உரிய இலக்கணமாக இந்த நிலை மதிக்கப்பெற்றது. இக்காலத்தில் இதை எதிர்பார்க்க முடியாது.

நாடு காண் காதை

கண்ணகியின் மென்மை

கோவலனும் கண்ணகியும் புகாரை விட்டு மதுரை நோக்கிப் புறப்பட்டுச் சென்ற வழியில், ஒரு காதத் தொலைவு கடந்த அளவிலேயே, கண்ணகி கோவலனை நோக்கி மதுரை இன்னும் எவ்வளவு தொலைவிலுள்ளது. என்று கேட்டாளாம். இன்னும் அண்மையில் தான் மதுரை உள்ளது - ஆறைங்காதத் தொலைவில் உள்ளது எனச் சிரித்துக் கொண்டே கூறினானாம். பாடல்

“இறுங் கொடி நுசுப்போடு இணைந்து அடிவருந்தி
நறும்பல் கூந்தல் குறும்பல உயிர்த்து
முதிராக் கிளவியின் முள்ளெயிறு இலங்க
மதுரை மூதூர் யாதென விவை
ஆறைங் காதம்ரும் அகல் நாட்டும்பர்

நாறைங் கூந்தல் கணித்தென நக்கு” (38-43)

என்பது பாடல் பகுதி. மிகவும் மெல்லியளாகிய கண்ணகி, முப்பது காதம் போக வேண்டிய வழியில் ஒரு காதம் சென்ற அளவிலேயே, ஒடிந்து விடுமோ என ஐயுறும் படியான மெல்லிய இடையும் அடியும் நொந்தவளானாள். இரைப்பு மூச்சு விட்டாள். இயலாமையால் பொய்ச்சிரிப்பு