பக்கம்:சிலம்போ சிலம்பு.pdf/242

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

238

சுந்தர சண்முகனார்


இளங்கோவடிகள் பொருத்தமான சூழ்நிலையில் பொடி வைத்து ஊதுவதில் வல்லவர். அத்தகைய சூழ்நிலையை உருவாக்கிக் கொள்வதிலும் வல்லவர்.

கணவனைத் தவிரத் தெய்வம் தொழுவது எனக்கு வழக்கமில்லை என்று கண்ணகி தேவந்தியிடம் சொல்லிக் கொண்டிருந்த போதுதான், கோவலன் மாதவியைப் பிரிந்து கண்ணகி இருக்கும் தங்கள் வீட்டு வாயிலுக்குள் வந்து கொண்டிருந்தானாம். அவனது வருகையைப் பணிமகள் ஒருத்தி கண்ணகிக்குத் தெரிவித்தாள். பாடல்:

“ஆடுதும் என்ற அணியிழைக்கு அவ்வாயிழையாள்
பீடன்றுஎன இருந்த பின்னரே நீடிய
காவலன் போலும் கடைத்தலையான் வந்துநம்

கோவலன் என்றாள் ஓர் குற்றிடையாள்” (63.66)

என்பது பாடல் பகுதி.

இந்த உரையாடலின் போதுதான், கோவலனால் நீ வெறுக்கப்படவில்லை என்னும் பொருளில் ‘கைத்தாயும் அல்லை’ என்று தேவந்தி கண்ணகியிடம் கணி (சோதிடம்) சொல்வதுபோல் சொன்னாள். காக்கை அமர்வதற்கும் பனம்பழம் விழுவதற்கும் பொருத்தமாயிருந்தது என்பது போல், தேவந்தி கூறிய சிறிது நேரத்தில், கோவலன் மாதவியை வெறுத்துக் கண்ணகியை விரும்பி வந்து விட்டான். இளங்கோவின் இந்த இலக்கியக் கலையும் சுவைத்து இன்புறத்தக்கது.

வேட்டுவ வரி

கண்ணகியின் கூச்சம்

கவுந்தியடிகளும் கண்ணகியும், கோவலனும் உறையூரைக் கடந்து மதுரை செல்லும் வழியில் ஓர் ஐயை கோட்டத்தில் தங்கி இளைப்பாறினர். அப்போது, வேட்டுவக்குடியில்