பக்கம்:சிலம்போ சிலம்பு.pdf/292

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

288

சுந்தர சண்முகனார்


மாதவி தன் தீதிலள் என்று கூறிய கோவலன் தொடர்ந்து இது ‘என்தீது’ (13:95) என்று கூறினானாம். அதாவது, மாதவி மற்றொருவன்மேல் காதல் கொண்டிருப்பதாக எண்ணி அவளைப் பிரிந்தது என்னுடைய தவறு என்று கூறினானாம். இவனது மனை வாழ்க்கையை மண் தோண்டிப் புதைத்த மாதவியின்மேல் குற்றம் இல்லை - இது என்னுடைய குற்றமே எனக் கோவலன் எண்ணியது, அவனுடைய பழைய மட்ட அறிவை (பெண் ருசிப் புத்தியைக்) குறிப்பாகக் காட்டுகிறது.

மாதவி கற்புடையவளானாலும், அவள் பிறந்த தாய்க்குலம் - அதாவது - தாய் சித்திராபதியின் குலம் பரத்தையர் குலம் என்பதற்கு மற்றும் ஒரு சான்று மணிமேகலையில் உள்ளது. மணிமேகலையைச் சிறையிலிருந்து விடுதலை செய்யுமாறு சித்திராபதி சோழன் மனைவி இராசமாதேவியிடம் வேண்டிய பொழுது, அரச மாதேவி பின்வருமாறு கூறினாள்:

“கள்ளும் பொய்யும் காமமும் கொலையும்
உள்ளக் களவும் என்று உரவோர் துறந்தமை
தலைமையாக் கொண்டகின் தலைமையில் வாழ்க்கை
புலைமையென்று அஞ்சிப் போந்த பூங்கொடி

நின்னொடு போந்து மின்மனைப் புகுதாள்” (24:77-81)

என்பது பாடல் பகுதி. சித்திராபதியே! பெரியோர்கள் துறந்த கள், பொய், காமம் முதலியவற்றைத் தலைமையாகக் கொண்டுள்ள - தலைமையிலலாத - உன் இழிதொழில் வாழ்க்கைக்கு அஞ்சி மணிமேகலை இங்கு வரநேர்ந்தது. இனி உன்னுடன் வாராள் - என்பது கருத்து.

‘தலைமையில் வாழ்க்கை’ என்பதற்கு, கடையான பரத்தமைத் தொழில் என உ. வே. சா. பொருள் எழுதியுள்ளார். இதற்கு ஒப்பச் சிலம்பிலும் ஒரு சான்று