பக்கம்:சிலம்போ சிலம்பு.pdf/340

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

336

சுந்தர சண்முகனார்


விழா எடுத்தனர். சமணப் பள்ளிகளிலும் புத்தப் பள்ளிகளிலும் பல சிறப்பு நிகழ்ச்சிகள் நடைபெற்றன. பல்வேறு இசை வல்லுநர்களின் இசை நிகழ்ச்சிகள் இடம் பெற்றன. அரச வினைஞர் பலரும் சேர்ந்து இந்திரனை எழுந்தருளச் செய்து விழா நடத்தினர்.

விழாக் காலத்தில், தெருவில் கோவலன் முதலிய காமுகர்கள் களித்துத் திரிந்தனர். தெருவில் பொது மகளிர் பலர் திரிந்தனர். அவர்களின் மார்புகள் தெருவில் ஆடவர்களின் மார்புகளோடு உரசின. அதனால், பொது மகளிரின் மார்புத் தொய்யில் குழம்பு ஆடவர் மார்பில் தோய்ந்தன. இந்த மார்போடு வீடு செல்லின் மனைவி நம் மேல் ஐயங்கொண்டு கடிவாள் என எண்ணி ஆடவர் விருந்தினரோடு சென்றனராம். ஊடல் தீர்ப்பவரின் பட்டியலில் விருந்தினர்க்கும் இடம் உண்டல்லவா?

திருநீலகண்ட நாயனாருக்கும் இந்த விதமான இடையூறு (விபத்து) நேர்ந்தது. அவர் விருந்தினரோடு செல்லவில்லை போலும். அவர் மனைவி அவர் மேல் ஐயங் கொண்டு எம்மைத் தொடாதீர் என்றார். அதிலிருந்து மாறர் சேலை கட்டிய திருமேனிகளைத் திரும்பியும் பாராராயினார். அதனால், பட்டினத்தார், "மாது சொன்ன சூளால் இளமை துறக்க வல்லேன் அல்லேன்" என்று அவரை உள்ளத்தில் குறிப்பிட்டுக் கொண்டு பாடினார்.

சிலம்பில் இளங்கோவடிகள், இலக்கியச் சுவைக்காக இப்படியொரு காட்சியைப் படைத்துள்ளார். வேண்டுமென்றே உரசிக் கொண்டு போதல் நடக்கலாம்; ஆனால், விருந்தினரோடு போகும் அளவிற்கு நிலைமை முற்றியிராது.

புகாரின் சிறப்புப் போலவே சோழர் குடியின் சிறப்பும் பாராட்டத் தக்கது. மதுராபதி கண்ணகிக்குப் பல கூறிய போது, புறாவுக்காகத் தசையை அரிந்து கொடுத்த சோழன்