பக்கம்:சிலம்போ சிலம்பு.pdf/379

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

சிலம்போ சிலம்பு!

375


தத்தமக்குத் தெரிந்த கலைவல்லவர்போல் தாம் விரும்பிய பல்வேறிடங்களுக்கு ஓடி மறைந்து விட்டனராம். அதாவது வெற்றிகரமாகப் பின் வாங்கினர் போலும் பாடல்:

“சடையினர் உடையிடனர் சாம்பல் பூச்சினர்
பீடிகைப் பீலிப் பெருநோன் பாளர்
பாடு பாணியர் பல்லியத் தோளினர்
ஆடு கூத்த ராகி எங்கனும்
ஏந்துவாள் ஒழியத் தாம் துறை போகிய
விச்சைக் கோலத்து வேண்டுவயின் படர்தர”

(26:225–230)

இது சுவையான - நகைச் சுவை பொருந்திய பாடல் பகுதி. இலக்கிய ஒப்புமை காண்டல் என்னும் முறையில், இளங்கோவிற்குக் காலத்தால் கம்பர் இராமாயணத்திலும் சயங்கொண்டார் கலிங்கத்துப் பரணியிலும் அறிவித்துள்ள இத்தகைய சுவையான பகுதிக்ளைக் காண்பாம்.

கம்ப ராமாயணம் - சுந்தர காண்டம் - அக்ககுமாரன் வதைப் படலம்:

அனுமனுக்கு அஞ்சிய அரக்கர் பலர், தாம் உயிர் பிழைக்கப் பல மாறுகோலங்கள் பூண்டு தப்பித்துக் கொண்டதைக் கம்பர் நகைச்சுவையுறப் படைத்துக் காண்பித்துள்ளார்:

சிலர் மீனாகிக் கடலில் புக்கனராம். சிலர் ஆவின் உருக்கொண்டு வழியில் புல்பூண்டுகளை மேயத் தொடங்கினராம். சிலர் ஊன் (மாமிசம்) தின்னும் பறவை வடிவெடுத்து ஆங்குக் கிடந்த உடல்களைக் கொத்தினராம். சிலர் பார்ப்பன உருவெடுத்தனராம். சிலர் பெண் வடிவங் கொண்டு கூந்தலை வகிர்ந்து கொண்டிருந்தனராம். சிலர், ஐயா, அனுமனே! யாங்கள் உம் அடைக்கலம் - எங்களை விட்டுவிடுங்கள் என்று கெஞ்சினராம். சிலர் அசையாமல்