பக்கம்:சிலம்போ சிலம்பு.pdf/382

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

378

சுந்தர சண்முகனார்



"குறியாகக் குருதிகொடி ஆண்ட யாகக்
கொண்டுடுத்துப் போர்த்துத்தம் குஞ்சி முண்டித்து
அறியீரோ சாக்கியரை உடைகண்டால் என்.
அப்புறம்என் றியம்பிடுவர் அநேகர் ஆங்கே" (65)

"சேனைமடி களங்கண்டேம் திகைத்து நின்றேம்
தெலுங்கரேம் என்று சிலகலிங்கர் தங்கள்
ஆனைமணி யினைத்தாளம் பிடித்துக் கும்பிட்டு
அடிப்பாணர் எனப்பிழைத்தார் அநேகர் ஆங்கே" (66)

சோழன் பகைவரும் சேரன் பகைவரும் மக்கள் இனத்தவர். ஆதலின் கற்பனை கட்டுக்குள் இருந்தது. அனுமனுடன் பொருதவர்கள் அரக்கர் ஆதலின் பல வகையான மாற்றுருவங்கள் எடுத்ததாகக் கம்பர் கட்டு மீறிய கற்பனை செய்துள்ளார்.

இலக்கிய ஒப்புமை காண்டல் என்ற அடிப்படையில் சிலப்பதிகாரம், கம்பராமாயணம், கலிங்கத்துப்பரணி ஆகியவற்றில் உள்ள பகுதிகளை எடுத்துக் காட்டியதிலிருந்து ஒரு கருத்தை உறிஞ்சி எடுத்துக்கொள்ள முடியும். அதாவது: காலத்தால் முற்பட்ட சிலப்பதிகாரத்திலுள்ள கற்பனையைப் பின் வந்த கம்பரும், -- பெய்து கொண்டிருக்கலாம் என்பதுதான் அது. அல்லது, அவரவர் நூலில் இயற்கையாகவும் அமைந்திருக்கலாம்; ஆயினும், பின்னவை இரண்டும் சிலம்பின் பிழிவே என்பது ஏற்கத் தக்கதே.

நீர்ப்படைக் காதை:

போர்க்காலம் பதினெட்டு

தேவருக்கும் அசுரருக்கும் பதினெட்டாண்டு போர் நடந்ததாம். இராமனுக்கும் இராவணனுக்கும்பதினெட்டுத் திங்கள் போர் நிகழ்ந்ததாம். பாரதப் போர் பதினெட்டு