பக்கம்:சிலம்போ சிலம்பு.pdf/385

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

சிலம்போ சிலம்பு!

381


சில வேளைகளில் இந்தப் படைக்கலத்தை எய்வதுண்டு. இன்னும், ஏழையர், இரவலர் முதலியோருள்ளும் இத்தகையோர் உளர்.

இவ்வாறு தேவை நிறைவேற்றத்திற்குப் பயன்படுவதல்லாமல், கொடியவரின் கொடுமையை ஒழிக்கும் படையாகவும், இது செயல்படுவதுண்டு. இதனைத் திருவள்ளுவர் கொடுங் கோன்மை என்னும் தலைப்பில் கூறியுள்ள

"அல்லல்பட்டு ஆற்றாது அழுத கண்ணீரன்றே
செல்வத்தைத் தேய்க்கும் படை" (555)

என்னும் குறட்பா அறிவிக்கும். இஃதன்றி, கொடியவரைக் கொல்லும் படையாகவும் கண்ணிர் மாறுவது உண்டு. கண்ணகியின் கண்ணிர்தான்ே பாண்டியன் நெடுஞ்செழியனைக் கொன்றது. இதனைச் சிலம்பு . வாழ்த்துக் காதையில் உள்ள

"தொல்லை வினையால் துயருழந்தாள் கண்ணின்நீர்
கொல்ல உயிர்கொடுத்த கோவேந்தன் வாழியரோ" (13 - 1,2)

என்னும் பாடல் பகுதி பறை சாற்றும். 'உயிர் விட்ட' எனக் கூறாமல் உயிர் கொடுத்த என்று கூறியிருக்கும் தொடர், பாண்டியனைக் கோவேந்தன் ஆக ஆக்கிய நயச் சிறப்பு ஈண்டு மிக்வும் நுகரத்தக்கது. கண்ணிர் கொல்லும், வாள் படையாக உள்ளமையை நறுந்தொகையில் உள்ள.

"மனுமுறை நெறியின் வழக்கிழந் தவர்தாம்
மனமுற மறுகிகின்று அழுத கண்ணீர்
முறையுறத் தேவர் மூவர் காக்கினும்
வழிவழி ஈர்வதோர் வாளா கும்மே" (75)

என்னும் பாடல் பகுதி வலியுறுத்தும். வழி வழியாக வரும்