பக்கம்:சிலம்போ சிலம்பு.pdf/78

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

74

சுந்தர சண்முகனார்


னாம். கனவின்படியே, சச்சந்த மன்னன், அமைச்சன் கட்டியங்காரனால் கொல்லப்பட்டான்.

சேக்சுபியர் (Shakespeare) எழுதியுள்ள ஜூலியஸ் சீசர். (Julius Caesar) என்னும் நாடகத்திலும் இன்னதோர் செய்தி இடம் பெற்றுள்ளது. மன்னன் சீசர், ஒரு நாள் இரவு, சூழ்நிலை தக்கதா யின்மையின், தூக்கம் வராமல் படுக்கையில் புரண்டு கொண்டிருந்தான். அவன் மனைவி ‘கால்பர்னியா’ (Calpurnia) என்னும் அரசி அப்போது ஒரு தீய கனவு கண்டு அலண்டு போய்க் கத்தினாள். அரசியின் கனவை அறிந்த சீசர் இந்தக் கனவைப் பற்றிய நிலைமையை துறவியர் வாயிலாக அறியலான போது, அவன் வெளியில் போகாமல் இருப்பது நல்லது என்ற அறிவுரை கிடைத்தது. அரசி, மன்னன் அரண்மனையை விட்டு மறுநாள் வெளியே போகவே கூடாது என மிகவும் கண்டிப்பாய் வற்புறுத்தி மண்டியிட்டு வேண்டிக் கொண்டாள். மன்னர்க்கு உடல் நலம் இன்மையின் அவர் பேரவைக்கு வர முடியவில்லை என்று அறிவிக்குமாறு ஆண்டனி (Antony) என்பவனிடம் சொல்லி அனுப்பினாள். இவ்வளவு செய்தும், மிகவும் துணிச்சலுடைய சீசர் பேரவைக்குச் சென்றான் - கொல்லவும் பட்டான். இது ஒரு முன்னோட்டக் கனவாகும்.

அமெரிக்கக் குடியரசின் தலைவராயிருந்த ‘ஆபிரகாம் லிங்கன்’ (Abraham Lincoln) தாம் கொலை செய்யப்படப் போவதை முன் கூட்டி ஒரு கனவின் வாயிலாக அறிந்திருந்தாராம்; அதைத் தம் நாள் குறிப்புச் சுவடியில் (டைரியில்) குறித்தும் வைத்திருந்தாராம். இஃதும் ஒரு முன்னோட்டம்.

சோழன் குள முற்றத்துத் துஞ்சிய கிள்ளி வளவனைக் கோவூர் கிழார் பாடியதாக உள்ள புறநானூற்றுப் பாடல் ஒன்றில் இத்தகைய கனவுக் கருத்து ஒன்று சுவையாகச் சொல்லப்பட்டுள்ளது. சோழனின் பகைவர்கள், கெட்ட