பக்கம்:சிலம்போ சிலம்பு.pdf/82

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

78

சுந்தர சண்முகனார்


புதிய பறவைகள் வரினும் தீய நிமித்தமாகும் என்னும் ஒரு செய்தி புறநானூற்றில் புகலப்பட்டுள்ளது.

தற்செயலாகக் காதில் விழும் சொற்களில் மங்கலம் உள்ளமை - இல்லாமையைக் கொண்டும் நன்மை தீமைகள் கணிக்கப்படுவதுண்டாம். இதற்கு விரிச்சி, வாய்ப்புள் என்னும் பெயர்கள் உள்ளன. பாக்கத்தில் (சிற்றூர்ப்பக்கம்) சென்று வாய்ச் சொல் கேட்பதற்குப் ‘பாக்கத்து விரிச்சி’ என்னும் பெயர் தொல் - பொருள் - புறத்திணையியலில் (58) கூறப்பட்டுள்ளது. விரிச்சி, வாய்ப்புள் என்னும் பெயர்கள் புறப்பொருள் வெண்பா மாலையில் கூறப்பட்டுள்ளன.

மற்றும் பூனை, நரி போன்றவை சில குறுக்கே போகக்கூடாதாம். “நரி வலம்போனால் என்ன-இடம் போனால் என்ன - மேலே விழுந்து பிடுங்காமல் இருந்தால் போதும்’ என்னும் முதுமொழியும் ஈண்டு எண்ணத்தக்கது. மற்றும் ஒற்றைப் பார்ப்பான், கைம்பெண் போன்ற சிலர் எதிரே வரினும் தீய நிமித்தமாகும் என நம்புபவர்கள் உளர் - இது சரியன்று.

இவற்றைப் பற்றியெல்லாம் நன்கு அறிந்த இளங்கோ அடிகள் தம் நூலிலும் நிமித்தங்கள் சிலவற்றை அறிமுகப்படுத்தியுள்ளார். அவை வருமாறு:

இந்திர விழவு ஊர் எடுத்த காதை

புகாரில் இந்திர விழா நடைபெற்ற நாளில் கண்ணகியின் கண் இடப்புறம் - அதாவது இடக்கண் துடித்ததாம்; மாதவியின் கண் வலப்புறம் - அதாவது வலக்கண் துடித்ததாம். பெண்கட்கு இடப்புறத்து உறுப்புகள் துடித்தால் நன்மையும் வலப்பக்கத்து உறுப்புகள் துடித்தால் தீமையும் உண்டாகும் என்பது ஒருவகை நிமித்தம். இதற்கு நேர்-