பக்கம்:சிலம்போ சிலம்பு.pdf/88

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

84

சுந்தர சண்முகனார்


இடங்களையும் இருள் மயமாக்கினர். பூதம் தம் ஆற்றலால் இருளைப் போக்கி முசுகுந்தனுக்குத் துணை புரிந்தது. பின்னர் வந்த இந்திரன் அந்தப் பூதத்தை முசுகுந்தனுக்கு மெய்க்காவலாக இருக்கப் பணித்தான். அதன்படி அது புகாரில் இருப்பதாயிற்று.

இந்தக் கதையை, சிலப்பதிகாரத்தின் பழைய உரை ஆசிரியராகிய அடியார்க்கு நல்லார் எடுத்துக் கூறி இதற்குச் சான்றாக மேற்கோள் பாடல் ஒன்றும் தம் உரையில் தந்துள்ளார். அது வருக!

“முன்னாள் இந்திரன்...
காவல் அழித்துச் சேவல் கொண் டெழுந்த
வேட்கை அமுதம் மீட்க எழுவோன்
இந்நகர் காப்போர் யாரென நினைதலும்,
கேரியன் எழுந்து நீவரு காறும்
தார்கெழு மார்ப தாங்கல்என் கடனென,
உவந்தனன் கேட்டுப் புகழ்ந்த இப்பூதம்
நின்வழி யாகென நீறீஇப் பெயர்வுழிக்
கடுவிசை அவுணர் கணம் கொண்டு ஈண்டிப்
பொருது போர் தொலைந்தன ராகிப் பெரிதழிந்து
ஆழ்ந்த நெஞ்சின் சூழ்ந்தனர் நினைத்து
வஞ்ச மற்றிது வஞ்சத் தல்லது
வேறல் அரிதெனத் தேறினர் தேறி
வளைத்துத் தொடுத்த வல்வா யம்பின்
அயின் முகங் கான்ற ஆரிருள் வெயிலோன்
இருகனும் புதையப் பாய்தலின் ஒருகணும்
நெஞ்சங் காணா நிற்ப நின்ற

வஞ்சம் பெயர்த்த மாபெரும் பூதம்

என்பது முகவரி தெரியாத அந்தப் பாடலாகும். சேவல் = கலுழன். நேரியன் = மன்னன் முசுகுந்தன். இப்பாடலில் ஈற்றில் உள்ள “வஞ்சம் பெயர்த்த மாபெரும் பூதம்”