பக்கம்:சிவஞானம்.pdf/106

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

உயிர்களிடத்து அன்பு 99

தோய்ந்து செய்யின் அனைத்தும் இயலும். வருந்தி உழைப்போர்க்கு வாராதன இல்லை. முயற்சி வீண் போகாது; மெய்வருந்தக் கூலி தரும். நீங்கள் சிறி தும் மனந் தளரவேண்டாம். எதுவும் துவக்கத்தில் துன்பம் தரும் ; எனினும் பின்னர்ப் பயக்கும் இன்பம் பெரிதேயாகும். ஆதலின், பிள்ளைகளே, மனம் தளராமல் முயற்சி செய்யுங்கள். அஃது உங்கள் எண்ணத்தை ஈடேற்றும் ; உயர்வு பெற வழி காட்டும்; உற்றதுணையாய் ஒளிரும்.’’ என்று அவர்களுக்கு நன் மதி புகட்டினர்.

இதனைச் செவிமடுத்த சிறுவர்கள், உவகையும் ஊக்கமுங்கொண்டு சுமார் ஒரு மணி நேரம் வரையில் எழுதினர். பின்னர், குப்புசாமிப் பிள்ளை அவைகளை ஒவ்வொன்ருக எடுத்துப் படித்துப் பார்த்தனர். அவர் க்ள் எழுதியிருந்த உரையாடல்களின் தலைக் குறிப்புக் களும், அதனை எழுதினேரின் பெயரும் வருமாறு :

தலைக்குறிப்பு எழுதினேரின் பெயர்

1. ஒரு பூனையின் துன்பம் ... கமலநாதன் 2. பூனையும் நாயும் ... தினகரன் 3. ஆடும் கோழியும் ... பரிமேலழகன் 4. குதிரையும் கழுதையும் ... கணிகண்ணன் 5. வாத்தும் கோழியும் ... சிவானந்தன் 8. ஓர் உழவன் வளர்த்த எருது செல்வநாதன் 7. சிற்றெறும்பின் துயரம் ... மணிவண்ணன் 8. ஆடும் அதன் குட்டியும் ... சிவஞானம் 9. கோழியும் அதன் குஞ்சுகளும் ... தூயமணி

10. பொன்வண்டு பட்ட பாடு ... ஞானசம்பந்தன்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சிவஞானம்.pdf/106&oldid=563138" இலிருந்து மீள்விக்கப்பட்டது