பக்கம்:சிவஞானம்.pdf/66

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

உயிர்களிடத்து அன்பு 59。

அமைதியாகக்கேட்டார். அப்போது அவன், நான் பட்ட துன்பங்களையும், நம் எசமானன் இறந்துபட நேர்ந்ததின் காரணத்தையும், நம் எசமானியின் ஆதரவற்ற நிலையினையும், நம்மை எவரும் விலை கொடுத்து வாங்குவதற்கு முன்வரா திருத்தலையும் ஒருவாறு தனக்குத் தெரிந்த அளவில் கூறினன், இவைகளைக் கேட்ட அப்பெரியவர் பெரிதும் வருந்திக் கண்ணிர் வடித்தனர் : சிறு குழந்தை யாகிய உன்னை அன்புடன் கட்டித் தழுவினர். அப்போது, அந்த அயலான் நம்மை அழைத்துச் செல்லும் பொருட்டு என் கழுத்தில் தொங்கிக் கொண்டிருந்த கயிற்றைப் பிடித்து இழுத்தான். அச்சமயம் நான் அவைேடு செல்லுதற்கு மன மில்லாமல் அவ்விடத்திலேயே நின்று கொண்டி ருந்தேன். நான் வாராமை கண்ட அவன் என்னை அடித்து ஒட்டுதற்குத் தன் கையிலிருந்த கோலைத் தூக்கிப் பிடித்தான். அப்போது, அம்முதியவர் மிகுதியும் மனம் பதைத்து, அவனை நோக்கி, ஐயா, நீ இக்குதிரையை அடிக்க வேண்டாம்இழுத்துச் செல்லவும் வேண்டாம். நான் இதனை யும், இதன் குட்டியையும் விலைக்கு வாங்கிக் கொள் ளுகிறேன். நீ இக்குதிரையின் எசமாணியைத் தயை செய்து எனக்குக் காட்டு’, என்று சொல்லி அவனை அழைத்துக் கொண்டு சென்ருர். ஆழந்தாய், வெளியே சென்ற அப்பெரியவர் அரை மணி நேரத்திற்குள் திரும்பி வந்து விட்டார். நம் எசமா னிக்கு இவர் எவ்வளவு பொருள் கொடுத்தாரோ அதனை நான் அறியேன். அன்று முதல் நாம் இரு

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சிவஞானம்.pdf/66&oldid=563098" இலிருந்து மீள்விக்கப்பட்டது