பக்கம்:சிவஞானம்.pdf/94

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

உயிர்களிடத்து அன்பு 87

வழியே சென்றிருத்தல் வேண்டும். இது நிச்சயம்-ஒரு கால் அஃது எனக்குப் பின் புறத்தில் மறைந்திருத்தல் கூடுமோ? பின் புறத்தில் எங்கே மறைந்திருக்கும் ? மிகக் குளிர்ந்த இடத்தில் படுத்திருக்கப் பாம்புகள் விரும்புவதில்லை. ஆதலால், நான் தலைக்கு அணையாக வைத்திருக்கும் கம்பளத்தில் அநேகமாய் ஒளிந்திருக்க லாம். ஐயோ! அக்கொடும் பாம்பு அங்கே மறைந்திருத் தால் என் செய்வது ? நான் எழுந்திருப்பதற்குள் அஃது என்னை வெடுக்கென்று கடித்துவிடுமோ ! அந்தோ! கடவுளே! ஆயின் நான் இதுவரையில் பட்ட பாடனைத்தும் பயனற்றுப் போகுமோ!' என அப்போர் வீரன் ஒரு சிறிது வருந்தின்ை. பின்னர், ஆறிலும் சாவு , நூறிலும் சாவு, அஞ்சுவதில் யாதும் பயனில்லை” அப்பாம்பு வெளியே சென்றிருப்பினும் சரியே என் தலையணையில் ஒளிந்திருப்பினும் சரியே-நான் எழுந் திருக்கும்போது என் தலைக்கு அணையாக உள்ள அக் கம்பளத்தை வலுவாய்ப் பூமியில் அழுத்தியபடியே எழுந்திருப்பேனுகில் அப்பாம்பு அதில் மறைந்திருப்பி னும் என்னை ஒன்றும் செய்ய அதனுல் இயலாது ,” எனத் தீர்மானித்தவனுய் அப்போர்வீரன் திடீரெனத் தன் கைகளால் அக்கம்பளத்தை அழுத்திக்கொண்டு படுக்கையை விட்டு விரைந்தெழுந்தான். அதே சமயத் தில் அநதக் கம்பளத்திலிருந்து அப்பெரும் பாம்பு தன் படத்தை விரித்துக்கொண்டு சரேலென்று கிளம்பி அப்போர் வீரனைக் கடிக்க முயன்றது.

பிள்ளைகளே, அவ்வீரன் அவ்வளவு முன் சாக் கிரதையாக விருந்தும் அவனுக்கு எதிர்பாராது நேர்ந்த துன்பத்தைப் பாருங்கள் ; ஆல்ை, அப் போர்வீரனே

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சிவஞானம்.pdf/94&oldid=563126" இலிருந்து மீள்விக்கப்பட்டது