பக்கம்:சிவன் அருள் திரட்டு (ஆங்கில, மொழிபெயர்ப்புடன்).pdf/47

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கத்தை, மெய்ப்புப்பார்க்க தேவையில்லை

தேவாரம் 37 இணை-two அடியவர்- devotees அறிவுஅரிது - can not be perceived ஊரன் - Sundarar சடையன் - Sadaiyanar-the name of the father of Sundarar அல்லால் -but for திருவடி - holy feet காதலன் - son பத்து -ten (verses) அடியவர்-devotees பாடிய-sing தொழும் - worship துன்பம்-distress இடும்பை -இடையூறு-hindrance சூழகிலா-will not surround or approach. The Lord has matted locks where KONRAI flowers and VILWA leaves abound, By thinking of or meditating upon the Lord, the devotees shed tears (of joy) Excepting to those devotees Lord's feet are unperceivable. Üran-the son of Sadaiyanar viz., Sundarar witnessed the Lord at Kazhumalam (Seerkazhi) and sang ten verses. Distress and hindrance will not approach those who worship the lord by these songs with flowers in their hands. திருக்கூடலை ஆற்றூர் திருச்சிற்றம்பலம் வடிவுடை மழுவுஏந்தி மதகரி யுரி போர்த்துப் Vadivudai mazhuvu endhi madhagari yuri pörththup பொடியணி திருமேனிப் புரிகுழல் உமையோடும் Podiyanni thiru menip purikuzhal umai o dum கொடியணி நெடுமாடக் கூடலை யாற்றூரில் Kodiyanni nedu maadak kudalai yaaruril அடிகள் இவ்வழி போந்த அதிசயம் அறியேனே. Adigall ivvazhi pōndha adhisayam arriyanē. கூர்மையான மழுவைக் கையில் கொண்டவன்; மதயானையின் தோலைப் போர்த்துக் கொண்டவன்; திருநீறு பூசிய திருமேனி யுடையவன்; சுரிந்த கூந்தலையுடைய உமையோடு இருப்பவன் - கொடிகள் அழகு செய்யும் பெரிய மாளிகைளையுடைய கூடலை யாற்றூரில் இருப்பவன் - அச்சிவபெருமான் இந்த வழியில் வந்த அதிசயத்தை நான் அறியாமல் போனேனே!