பக்கம்:சிவன் அருள் திரட்டு (தேவாரம் திருவாசகம் திருப்புகழ் திருஅருட்பா).pdf/191

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

170 வெஞ்சிலை' என்ற பதிகம் பாடினர்; இழந்த பொருள்களை எல்லாம் திரும்பப் பெற்ருர், திருவாரூரை அடைந்தார். சிறிதுகாலம் கழிந்தது. சேரநாட்டுக்குப் போகவேண்டும் என்று சுந்தரர் நினைத்தார்: சேரநாடு நோக்கிப் புறப்பட்டார். வழியில் திருமுருகன்பூண்டிக்கு அப்பால் உள்ள திருப்புக்கொளியூர் அவிநாசி என்ற தலத்துக்குச் சென்ருர். அங்கே ஒரு வீட்டில் மங்கல ஒசையும் எதிர் வீட்டில் அழுகை ஒலியும் கேட்டார்; என்ன? என்று கேட்டார். "இரண்டு சிறுவர்கள்; ஒரே வயதினர்; இருவரும் அவ்வூர் மடுவுக்குச் சென்றனர்; ஒருவனே முதலை விழுங்கியது; இன்னொரு வன் தப்பிப் பிழைத்தான்; பிழைத்தவனுக்கு அன்று முந்நூல் அணியும் கலியாணம்; மகனே இழந்தவர்கள் தம் மகனை நினைந்து அழுகிருர்கள்’’ என்று சுந்தரரிடம் கூறினர்கள். சுந்தரர் மனம் இரங்கினர், மடுவுக்குச் சென்றனர்: "எற்ருன் மறக்கேன்' என்று தொடங்கித் திருப்பதிகம் பாடினர். சுந்தரர் நான்காவது பாடல் பாடியதும் முதலை தோன்றியது; தான் விழுங்கிய சிறுவனத் தக்க வளர்ச்சியுடன் உமிழ்ந்து சென்றது. எல்லாரும் வியப்பு அடைந்தனர். அங்கிருந்து புறப்பட்டுச் சுந்தரர் சேரநாட்டை அடைந்தார்: சேரமான் பெருமாளுடன் சில காலம் தங்கினர்; திருவஞ்சைக் களத்து இறைவனை வணங்கினர்; 'தலைக்குத் தலைமாலை' என்ற பதிகம் பாடினர்; தம்மை அழைத்துக்கொள்ள வேண்டும் என்று இறைவனை வேண்டினர். இறைவன் ஏவலால் தேவர்கள் ஒரு வெள்ளே யானையுடன் வந்தனர். சுந்தரரும் அதில் ஏறிக்கொண்டார். சேரமான் பெருமாள் ஒரு குதிரையின் மேல் ஏறிக்கொண்டு உடன் சென்ருர். சுந்தரர் 'தானெ?ன முன் படைத் தான்' என்ற பதிகம் பாடிக் கொண்டே திருக்கயிலையை அடைந்தார். 'வாழி திருநாவலுர் வன் ருெண்டர் பதம் போற்றி' திருச்சிற்றம்பலம்