பக்கம்:சிவன் அருள் திரட்டு (தேவாரம் திருவாசகம் திருப்புகழ் திருஅருட்பா).pdf/354

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

335 சந்தப்பாக்களால் கேட்போரை மெய்யுருகச் செய்யும் வண்ணம் பாடினர். அக்கணமே அவையிலே பேரொளி பொங்கியது. அடியார்க்கு எளியவராம் அம்பலக் கூத்தனின் அன்புக் குமரன், திருக்கை வேல் விளங்க-மயில் மீது ஆரோகணித்து எழுந்தருளி மறைந்தார். அரசனும் அடியார்களும் கண்பெற்ற குருடர் போல்,கடவுளைக் கண்டு கூத்தாடினர். “முருகா! முருகா" என்ற திருநாமத்தின் ஒசை விண்னும் மண்ணும் எட்டியது. 'அருணகிரிநாதரை முருகப்பெருமான் ஆட்கொண்டருளியது சத்தியம்’ என்று துதித்தவர் பல பேர்! "அற்புதம்! அற்புதம்! ஐயனின் தரிசனம் அற்புதம்' என்று அகமகிழ்ந்தோர் பல பேர். அருணகிரிநாதரின் பக்தி மேலும் மேலும் பெருகியது. அருணகிரிநாதர் ஆங்காங்கே எழுந்தருளியுள்ள ஆறுமுகப் பெருமானைத் தரிசித்துப்பாமாலையால் பூமாலை சூட்ட எண்ணினர். ஒரு நாள் அருணகிரிநாதர், திருவண்ணுமலை ஈசனையும், உண்ணுமலை அம்மனையும் அவர் தம் குமாரனையும் போற்றிப் பணிந்து தமது தல யாத்திரையைத் தொடங்கினர். இமயம் முதல் குமரி வரை யாத்திரை புரிந்தார். ஈழ நாடு சென்று கதிர்காமம், திருக்கோணமலை, யாழ்ப்பாணம் முதலிய திருத்தலங்களில் எழுந்தருளியுள்ள எம் பெருமானே நெஞ்சு நெகிழத் தேன்தமிழால் பாடி மகிழ்ந்தார். தில்லையிலே நடராஜ நர்த்தனமும், திருச்செந்துாரிலே முருகனின் திரு நடனமும் கண்டு பேரின்பம் பூண்டார். சுவாமி மலையிலே பிரணவ மந்திர உபதேசம் பெற்ருர். விராலிமலை வேலவனப் போற்றிப் பணிந்து அஷ்டமா சித்தி களையும் பெற்ருர். வயலூரிலே,அருணகிரிநாதர் பாடிய திருப்புகழ் அமிழ்தத்தைக் கேட்டு மகிழ்ந்த முருகப் பெருமான், திருப்புகழைத் தமது திரு மார்பிலே செம்பொன் பதக்கமாக அணிந்து கொண்டார்.