பக்கம்:சிவன் அருள் திரட்டு (தேவாரம் திருவாசகம் திருப்புகழ் திருஅருட்பா).pdf/37

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

13 சம்பந்தர் திருநெல் வாயில் அரத்துறை என்ற தலத்துக்குச் சென்ருர். அப்பொழுது வெய்யில் கடுமையாக இருந்தது. சிவ பெருமான் திருவருளால், சம்பந்தருக்கு முத்துச்சிவிகை, குடை ஊது கொம்பு ஆகியவை கிடைத்தன. சம்பந்தர் மகிழ்ந்தார். சிவாயநம என்று சொல்லி அப் பல்லக்கில் ஏறினர்; கோயிலுக்குச் சென்ருர், "எந்தை ஈசன் எம்பெருமான் ' என்று பதிகம் பாடினர்: பிறகு சம்பந்தருக்குப் பூணுால் கல்யாணம் நடந்தது; அப் பொழுது சம்பந்தர் சிவாயநம எனப்படும் திருவைந்தெழுத்தின் பெருமையை விளக்கித் துஞ்சலும் துஞ்சல் இலாத" என்ற பதிகம் பாடினர். சம்பந்தர் காலத்தில் முதிர்ந்த சிவன் அடியார் ஒருவர் வாழ்ந்து வந்தார். அவர் திருநாவுக் காசர் என்ற பெயருடையவர். திருநாவுக்கரசர் சம்பந்தருடைய பெருமையை அறிந்தார் சீர்காழிக்கு வந்தார்; சம்பந்தரை வணங்கினர். பிறகு சம்பந்தர் பல தலங்களை வழிபட விரும்பினர்: திருப்பாச்சில் ஆச்சிரமம் என்ற ஊரை அடைந்தார்; அவ்வூரில் கொல்லிமழவன் என்ற பெயருடைய அரசன் இருந்தான். அவனுக்கு ஒரு மகள்: அவள் முயலகன் என்ற நோயால் வருந்திக் கொண்டு இருந்தாள். இதைச் சம்பந்தர் அறிந்தார்: 'துணிவளர் திங்கள் என்று தொடங்கிப் பதிகம் பாடினர். அந்த நோயும் அப்பெண்ணை விட்டு நீங்கியது. பிறகு சம்பந்தர் திருக் கொடி மாடச் செங்குன்றார் என்ற தலத்துக்குப் போளுர். அங்கே பனியின் கொடுமை அதிகம் ஆக இருந்தது; பலரும் விஷசுரத்தினுல் வருந்தினர்கள். சம்பந்தர் மனம் இளகியது; "அன் வினைக்கு இவ் வினை' என்று தொடங்கிப் பதிகம் பாடினர்; சுர நோயும் நீங்கியது. பின்னர், பல தலங்களுக்குச் சென்று இறைவனை வணங்கிக் கொண்டே கும்பகோணத்துக்கு அருகில் உள்ள பட்டிச்சாம் என்னும் தலத்துக்கு வந்தார். அப்பொழுது வெய்யில் மிகக் கொடுமையாக இருந்தது. சிவபெருமான் கருணை கூர்ந்தார்; சம்பந்தருக்கு முத்துப் பந்தலை அளித்தார். சம்பந்தரும் முத்துப் பந்தலின் நிழலில் கோயிலுக்குச் சென்று பதிகம் பாடித் துதித்தார்.