பக்கம்:சிவன் அருள் திரட்டு (தேவாரம் திருவாசகம் திருப்புகழ் திருஅருட்பா).pdf/40

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

16 சொல்லித் தடுத்தார். சம்பந்தர், சிவபெருமானின் அடியார் களுக்கு எல்லா நாள்களும் நல்ல நாள்களே' என்று கூறி,"வேயு.ஸ் தோளி பங்கன் என்று தொடங்கும் பதிகத்தைப் பாடினர்: மதுரைக்குப் புறப்பட்டார். சம்பந்தர் மதுரையை அடைந்து ஒரு மடத்தில் தங்கினர். சம்பந்தர் வருகையை அறிந்த சமணர்கள் பயந்தார்கள்: சம்பந்தர் தங்கி இருந்த மடத்துக்குத் தீ வைத்தார்கள். சம்பந்தர், செய்யனே திரு ஆலவாய்' என்று தொடங்கும் பதிகம் பாடினர் மடத்தைப் பற்றிய தீ நீங்கியது; வெப்பு நோயாக மாறியது; கூன் பாண்டியனைப் பற்றியது. பாண்டியனும் வருந்தின்ை. பாண்டியனது சுரநோயைப் போக்கச் சமணர்கள் பலமாக முயற்சி செய்தார்கள்; நோய் நீங்கவில்லை. அரசனுடைய ஒப்பு தலைப் பெற்று, மங்கையர்க்கரசியார் சம்பந்தரை அங்கே வரச் செய்தார். சம்பந்தர் வந்தார்; அரசனுடைய உடம்பின் மேல் திருநீறு பூவினர்; மந்திரம் ஆவது நீறு என்று தொடங்கும் பதிகம் பாடினர். வெப்பு நோய் நீங்கியது. - "இதில் ஏதோ சூது இருக்கிறது; இன்னெரு முறை வாது செய்ய வேண்டும்' என்று சமணர் கூறிஞர்கள். சம்பந்தர் மறு படியும் வாது செய்ய ஒப்புக் கொண்டார். இப்பொழுது நடக்க இருப்பது அனல்வாதம். சம்பந்தர் திருநள்ளாறு என்ற தலத்துக்குச் சென்றபொழுது போகமார்த்த பூண் முலையாள்' என்ற பதிகம் பாடியிருந்தார்: அப்பதிகம் எழுதியிருந்த ஏட்டை எடுத்தார்; தளிர் இளவளர் ஒளி என்று தொடங்கிப் பதிகம் பாடி இறைவனைத் துதித்தார்: தியில் இட்டார். சம்பந்தர் இட்ட ஏடு எரியாமல் பச்சையாக இருந்தது. சமணர்கள் தம் சமயக் கொள்கையை ஒர் ஏட்டில் எழுதிர்ை கள்; தீயில் இட்டார்கள்; அந்த ஏடு எரிந்து விட்டது. சமணர்கள் இவ் வாதத்தில் தோற்ருர்கள்; என்ருலும் மறு படியும் சம்பந்தரை வாதுக்கு அழைத்தார்கள். இப்பொழுது மந்திரி குலச்சிறையார் குறுக்கிட்டார்; "இம்முறை தோற்ருல்? என்று கேட்டார். எங்களை இவ் வேந்தனே கழு ஏற்றட்டும்' என்று சமணர் பதில் கூறினர்.