பக்கம்:சிவபிரான் கருணையுஞ் சீவர்கள் கடமையும்.pdf/10

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

7


இவ்விருவர்களுக்குமுள்ள பேத‍த்தை நம்சுவாமிகள் யாவரும் வியந்தின்புறுமாறு மிக அழகுபெறக் கூறியிருக்கின்றார்கள். எங்ஙனமெனின்; உலகத்தலைவர்களாகிய அரசர் முதலியோரை யுலகத்துள்ள மற்றையோரெல்லாம் நன்கு தெரிவர்; அத்தலைவர்களின் குணஞ்செயல்களையும் வரையறுத்துணர்வர். அத்தலைவர்கள், பிறரெல்லாரையும் அறியார்; அன்னார் குணஞ்செயல்களையு நன்குதெரியார். கடவுட்டலைவராகிய சிவபிரானோவெனின், பிறரெல்லாரையும் அன்னார்குணஞ் செயல்களையும் “அவன‍ன்றி யோரணுவு மசையா”தென்றபடி யுயிர்க்குயிராய் நின்று நன்குணர்வர். பிறர்க்கு அப்பெருமான் பெற்றியுணர்வரியதாகும். இப்பொருணலங்களையே நமது சுவாமிகள், மேற்காட்டியபடியும், “பெற்றி பிறர்க்கரிய பெம்மான்” எனவும் அருளிச் செய்வாராயினர். “குறைவிலா நிறைவே”யென்பது, அப்பெருமான் கருணையைப் பற்றியதாகும். சிவபிரான், தங்கருணையைப் பிறரெத்துணை யள்ளிக்கொண்டாலும் குறைவின்றி நிரம்பியிருப்பரென்பதாம். இவ்விரு விஷயத்தையும் “தெள்ளிப் பிறராற் றெரிவரியான் றன்கருணை, யள்ளக் குறையா வரன்” என்பதனானும் நன்குணரலாம். இதனால், தங்கருணையைக் கொள்ளாவிட்டாற் குறைவரேயன்றிக் கொள்ளக்குறையாரென்பதும் வெளியாதல் உய்த்துணர்க. எவ்வுயிர்க்கும் இரங்கி, அவற்றிற்குவரும் இடையூற்றையொழித்து இன்பளித்தல் சிவபிரான் ஒருவர்க்கே கூடுமென்பதும், மற்றையோர்க்கியன்றவரை கருணைசெய்தலே கூடுமென்பதும் ஆன்றோர் துணிபாகும். இதுகருதியே அருளைப்பற்றித் திருமூலதேவர் கூறுமிடத்து,

“ஆருயிர் யாதொன் றிடருறு மாங்கதற்
கோருயிர் போல வுருகி யுயக்கொள்ள
நேரி னதுமுடி யாதெனி னெஞ்சகத்
தீர முடைமை யருளி னியல்பே”

என்று மற்றையோர்க்கியன்றவாறு “முடியாதெனி னீரமுடைமை யருளினியல்பே” எனக் கட்டளையிட்டருளினார்.

சிவபிரானுக்கு முடியாத தொன்றின்மையின், அவரே கருணையை முழுவிலக்கணத்துடன் ஆளுந்தகுதியினரென்பது வெள்ளி