பக்கம்:சிவபிரான் கருணையுஞ் சீவர்கள் கடமையும்.pdf/9

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

6


(௨) சிவபிரானே கருணையை முழுதும்‌ ஆளுதற்குரியர்‌

இனி, இக்கருணையை முற்றும்‌ ஆளுதற்குரியர்‌ சிவபிரான்‌ ஒருவரே யென்பதைப்பற்றிக் கூறுவேன். “அருளொடு மன்‌ பொடும்‌ வாராப்‌ பொருளாக்கம்‌, புல்லார்‌ புரள விடல்‌”” என்னுந் திருக்குறளால், அருள் உயர்ந்தோர் தம்மிற்றாழ்ந்தோரிடத்தும், அன்பு தாழ்ந்தோர் தம்மின் உயர்ந்தோரிடத்தும் செய்யுங் குணங்களாமென்பது வெளியாம். அச்சிறப்பிலக்கணப்படி எல்லாவுலகத்துமுள்ள எல்லாவுயிர்களிடத்தும் ஒருங்கே கருணைசெய்தல் எல்லாம் வல்ல சிவபிரான் ஒருவர்க்கே கூடுமன்றிப் பிறதேவர்களுக்கின்றாம். வேறு தேவர்களு மக்களுட் சிறந்தார் சிலரும் இவ்வருட் குணத்தையுடையராய்க் காட்டிய சரிதங்களுமுளவே யெனின்; அம்மக்கடேவர்கள் யாவருக்கும், ஒவ்வோரமயங்களிற் றம்மிற்றாழ்ந்தாரிடத்துக் கருணை நிகழுமாயினும், தமக்கெல்லாமுயர்ந்தாராகிய சிவபிரான் ஒருவரிருத்தலான், அவரிடத்து அன்பேயன்றி அருள் செய்தற்கியை பின்மையானும், சிவபிரான் எவரானும் விலக்குதற்கொண்ணாத பாற்கடற்கண் எழுந்த விடத்தைப் பானஞ்செய்து யாவர்க்கும் தாந்தலைவரென்பதையும், யாவரிடத்துங் கருணைசெய்யத் தக்கவரென்பதையுங் காட்டினமையானும் கருணையின் முழுவிலக்கணமும் ஏனையோரிடத்தன்றிச் சிவபிரான் பக்கலிருப்பதை யுணரலாம்.


இவ்வருட்குணத்தின் பகுதியாகிய கண்ணோட்டத்தைப் பற்றியெழுந்த “பெயக்கண்டு நஞ்சுண் டமைவர் நயத்தக்க, நாகரிகம் வேண்டு பவர்” என்னுந் திருக்குறளிலும் சிவபிரான் விடமுண்ட சரிதங் குறிப்பிடத்தக்க தொன்றாம். சிபி, த‍தீசி முதலியோர் சரிதக்குறிப்புக்களைச் சில குறள்களிற் கண்டு உரைக்கட் காட்டிய ஆசிரியர் பரிமேலழகர் இதனையுமீண்டுக் காட்டியிருப்பின் மிக நன்றாகும். இறைவனுக்கு எல்லாஞ்செய்யும் ஆற்றல் இயற்கையென்றொழிந்தார் போலும். சிவபிரான்றலைமையும், அவர் கருணைத் திறமும் ஸ்ரீமாணிக்க வாசக சுவாமிகள், தாம் அநுபவித்துத் திருவாய் மலர்ந்தருளிய திருவாக்குக்களிற் பரக்கக்காணலாம். “தன்மை பிறரா லறியாத தலைவா” என்பது தலைமை பற்றியதாகும். தலைவர்களை யுலகத் தலைவரெனவுங் கடவுட்டலைவ ரெனவும் இருவகையாக‍க் கொள்ளலாம்.