பக்கம்:சிவபிரான் கருணையுஞ் சீவர்கள் கடமையும்.pdf/8

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

5

ளுங்கால் அருட்பெருகு தனிக்கடல் திருஞானசம்பந்த சுவாமிகளும், அன்புசெறிகடல் திருநாவுக்கரசு சுவாமிகளுமாவார். இவ்விருவரிடத்தும் அருள் அன்பு என்னும் இருகுணங்களுமுள வெனினும் அவற்றாலாம் பயனை நோக்கி விசேடமாக ஆராயுங்கால் அப்பர் சுவாமிகள், சிவபிரானும், சிவனடியார்களுமே தமக்குரியவர்களாக‍க் கொண்டு அன்பு செய்தமையானும், தாத மார்க்கத்தில் வெளிப்பட நின்று ஒழுகியமையானும், அம்மார்க்க ஒழுக்கத்துக்குத் தலைவன் ஒருவனை மேற்கொண்டு அன்பு செய்தலே முக்கியமாதலானும், அவர்களிடத்துள்ள அருட்குணத்தினும் அன்பே யாவர்க்கும் வெளிப்படக் காணப்படலான், அவர்களை யன்புக்கடலென்றும், திருஞான சம்பந்த சுவாமிகளிடத்து அவ் அன்புளதெனினும் அவர்கள் சற்புத்திர மார்க்கத்தில் வெளிப்பட ஒழுகியமையானும், இறைவன்குணம் அருளேயாதலானும், சுவாமிகளிடத்து எல்லாவுயிர்கண் மேலும் இயல்பாக எழுங்கருணையே மேலிட்டிருந்தமையானும், திருப்பெருமண நல்லூரில், தந் திருமணக் கோலத்தைத் தரிசிக்க வந்திருந்த பக்குவாபக்குவர்களாகிய வெல்லோர்க்கும் அக்கணத்திலேயே ஸம்ஸ்கார பூர்வமாக‍க் கொள்ளைகொள்ள வீடுதவிக் கூற்றைப் பிடித்துத் தள்ளித்தம் அருட்குணப்பயனைக் காட்டியமையானும் அவர்களை யருட்கடலென்றுந் திருவாய் மலர்ந்தருளினார் ஆசிரியர் சேக்கிழார் சுவாமிகள்.

ஈண்டு இன்புறத்தக்க தோரியைபென்னையெனின், அன்பினாலருளுண்டாவது பற்றி அன்பு அப்பனும், அருள் பிள்ளையுமாகும். அம்முறையே அன்புக்கடலாகிய நாவரையரை அப்பரெனவும், அருட்கடலாகிய சம்பந்தரைப் பிள்ளையாரெனவும் பெரியார் பாராட்டி வழங்குதலேயாம். அந்நாயன்மார்பாற் கருணையின்மைக்குச் சரிதங்காட்டிப் பேசுவாருஞ் சிலருளராலோவெனின்; அன்னார் கூற்று சிவபிரான் கருணையைப் பாகுபாடுசெய்து கூறுங்காற் சொல்லப்படுஞ் சங்கோத்தரங்காளாற் சிறிதும் பொருந்தாமையுணரலாம். இவ்வளவிற் கருணையின் இலக்கணம் ஒருவாறு சுருக்கிக் கூறப்பட்டது.