பக்கம்:சிவபிரான் கருணையுஞ் சீவர்கள் கடமையும்.pdf/7

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

4

யின் முதிர்ச்சியா னுண்டாயதென் ற‍றிதல்வேண்டும். இது கருதியே “அருளென் னுமன்பீன் குழவி” யென்றார் திருவள்ளுவதேவரும். இவ்விடத்துத் திருத்தொண்டர் புராணத் திருப்பாட்டினியைபு ஒன்றனைப் புலப்படுத்தி மகிழாமலிருக்கக் கூடலில்லை யாதலின், அதனையுஞ் சிறிதுகாட்டுத லவசியமாகின்றது. திருஞான சம்பந்த சுவாமிகளும், திருநாவுக்கரசு சுவாமிகளும் சீகாழியில் திருத்தோணியப்பரையும், அம்மையாரையுந் தரிசிப்பான் செல்லுங்கால் அவ்விருவர்களும் ஒருங்குக் கூடிச்செலுந் திப்பிய காட்சியை நூலாசிரியராகிய சேக்கிழார் சுவாமிகள், தம்மனத்தின்கண், தியானமுகமாக எழுதிப் பார்த்துப்பார்த்து மகிழ்ந்தின்புற்று, அம்மகிழ்ச்சி யின்பங்களை நம்மனோருஞ் சிறிது பெற்றுய்யுமாறு, தாந்துய்க்கும் இன்பம் பொங்கி வெளிப்படுதல்போல ஒர‍ருமைப் பாசுரத்தை யருளியிருக்கின்றார்கள். அப்பாசுரத்தின் கருத்து, அந்நாயன்மார்க ளிருவர்களது ஒன்றுபட்ட தோற்றத்துக்கு ஒப்புக் கூறுவதே யாகும்.

அது வருமாறு:-

“அருட்பெருகு தனிக்கடலு முலகுக் கெல்லா மன்புநெறி கடலுமா மெனவு மோங்கும், பொருட்சமய முதற்சைவ நெறிதான் பெற்ற புண்ணியக்கண் ணிரண்டெனவும் புவன முய்ய, இருட்கடுவுண் டவர‍ருளு முலக மெல்லா மீன்றாடன் றிருவருளுமெனவுங் கூடித், தெருட்கலைஞா னக்கன்று மரசுஞ் சென்று செஞ்சடைவா னவர் கோயில் சேர்ந்தா ரன்றே ” என்பதே.

இதன்கட் கூறப்பட்ட வுவமைகளையன்றி வேறு எத்துணை நீண்டு நினைப்பினும் “உயர்ந்ததன் மேற்றே யுள்ளுங்காலை” யென்னும் உவமவி லக்கணத்துக்கு மாறுபாடின்றி யீண்டுக் கூறத்தக்கது யாதுளது? என்னே இவ்வுவமைகளின் அருமைநயங்கள்! இங்ஙனங் கூறுதலன்றே ஆன்ற அருட்கவிகளினியற்கை. இப்பாசுரத்தி னரும் பொருள்களை முற்றக்கூறினீண்டு விரியுமாதலின், இயைபுடைய முதலடியின் பொருளைமாத்திரஞ் சுருக்கிக் கூறுவேன். இதனிறுதி யடியில் “தெருட்கலை ஞானக்கன்று மரசும்” என்று கூறுவதால் நிரனிரையாகப் பொருள்கொள்ளுதல் வேண்டும். அங்ஙனங்கொள்