பக்கம்:சிவபிரான் கருணையுஞ் சீவர்கள் கடமையும்.pdf/6

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

3

ழி்ல்களைப் புரிவர்.

அதனாலன்றே,

 

என்று வாயுசங்கிதை கூறியாங்கு தொழிலதிகாரநிலயராகிய முக்கிய தேவர்களின் பெயர்களெல்லாஞ் சிவபிரானுக்குப் பொருந்தின. சிவனென்னும் வாசகமோ “சிவனெனு நாமந் தனக்கே யுடைய செம்மேனி யெம்மான்” என்னுந் தமிழ்வேத‍த்தான் ஏனையோர்க்குச் சொல்லாதென்பது போதரும். இதனாற் சிவபிரானுக்குள்ள முழுமுதன்மை வேறு தேவர்களுக்கின்றென்பது முணர்க. இங்ஙனமின்றி நித்தியமங்களார்த்த வாசகமாகிய இச்சிவசப்த‍த்தை பிறசமயத்தார் தஞ்சமய தெய்வங்களுக்குக் கூறிக்கொள்ளின, அஃது அந்வர்த்த நாம‍மாகப் பொருந்தாதென்பதுண்மை யெனினும், நம் சிவபிரான் மாட்டு அமைந்துகிடக்கும் உயர் நலங்களே அன்னாரையவ்வாறு கூறச்செய்தன வென்றும், அதனாற் சைவ மக்களாகிய நம்மனோர்க்குப் பெருமையே யென்றும் நினைந்து மகிழ்வோமாக. இத்துணையும் ஒருவாறு சுருக்கியுரைத்த சிவபரத்துவ விஷயம் தனியான ஓர‍ரிய உபந்யாசமாக விளக்க வேண்டிய தொன்றாகலின், இதனை நிறுத்தி மேல் இப்பெருமான் கருணைத் திறத்தைச் சிறிது கூறுவேன்.



(௧) கருணையினிலக்கணம்‌.

கருணை, தயை, இரக்கம்‌, அருள்‌ என்பன ஒரு பொருட்சொற்‌கள்‌. இது:--பரமபதியாகிய சிவபிரானுக்குரிய குணங்கள்‌ எட்டனுள்‌ முக்கியமான தொன்றாகும். இதுவே, அப்பெருமானிடத்து அலுப்த சக்தி, அல்லது பேர‍ருளுடைமை யென்று சொல்லப்படும். இக்கருணைக் குணத்தின் இலக்கணமாவது, ஒருவர் தமக்குரியாரை நோக்கி இவர் எமது தந்தையார்; இவர் எமது தாயார்; இவர்கள் எம் உடன்பிறப்பாளர்; இவர்கள் எம்உறவினர்; இவள் எமது மனைக்கிழத்தி; இவர்கள் எம் புதல்வர்கள் என்றின்னோரன்ன தொடர்புபற்றி மேற்கொள்ளும் அன்பு போலாது எல்லாவுயிர்கண் மாட்டும் இயல்பாக நிகழ்கின்ற அருளேயாகும். இவ்வுயர்குணம் நம்மனோர்க்கு ஒருசிறிது வாய்க்குமாயின், அது தொடர்பு பற்றியெழும் அன்