பக்கம்:சிவபிரான் கருணையுஞ் சீவர்கள் கடமையும்.pdf/11

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

8

டைமலை யெனவுணரத் தக்கதொன்றாம். இன்னும் இவ்வுண்மையை ****** என்னு மந்திரமும் வலியுறுத்தும். சகலதேவர் மக்கண் முதலிய யாவர்க்கும் எவற்றுக்கும் ஈயுந்தாதா சிவபிரானே யாவரென்பது, எஜுர் வேத‍த்துள்ள சமகமந்திரங்கள், திருமால் பிரமன் முதலிய தேவர்களை அன்னத்தோடு சேர்த்து ஈயப்படும் பொருளாக‍க் கூறினமையானும், சிவபிரானை யங்ஙனங் கூறாமையானு நன்குணரலாம். யாவருந் தம்பா லிரக்கத் தாம் வேண்டியார் வேண்டியாங் கீயும் பெருங் கொடையாளியாதலின், இப்பெருமானே, கருணையென்னும் உயர்குணத்தின் முழுப்பாகத்தையும் உடையாரென்பது தேற்றமாம்.

(௩) சிவபிரான் கருணையின் சிறப்பு.

இனி, நம் பெருமானுக்குரிய எண்வகைக் குணங்களுட் கருணையும் ஒன்றெனினும், இக்குணமே, நாமெல்லாம் வழிபட்டுய்தற்குரிய திருமேனியை இறைவன் கோடற்குரியதாக விருத்தலின் மிகச் சிறந்ததாகும். சிவபிரான் உண்மைச் சொரூப விலக்கணம் “செறிசிவ மிரண்டு மின்றிச் சித்தொடு சத்தாய் நிற்கும்” என்றபடி ச‍ச்சிதாந‍ந்தப் பிழம்பேயாகும். இந்நிலை மலபத்தர்களாகிய ஆன்மாக்களுணரவரிய தாகலின், அவ்வான்மக்களின் பொருட்டு இறைவன் அருவம், உருவம், அருவுருவம் என்னு மூவகைத் திருமேனியுமுடையராய் வெளிப்பட்டருளுவர். இதுவே தடத்த நிலையெனப்படும். இத்திருமேனிகள் கருணையாற் கொண்டனவேயாம். இவ்விருவகை நிலையும் இறைவனுக்குரிய வென்பதையும், கருணையே வடிவ மென்பதையும், “கற்பனை கடந்த சோதி கருணையே வடிவமாகி”யெனவும், “செப்பிய மூன்றுந‍ந்தங், கருமேனி கழிக்க வந்த கருணையின் வடிவு தானே” எனவும் போந்த திருவாக்குக்களானறிக. ஈண்டு இக்கருணையே தமது வாமபாகம் பிரியாதுடனுறைந்து விளங்கும் உமாதேவியாகிய சிவசக்தியாகும். இஃது “அருளது சக்தி யாகு மரன்றனக்கு” என்பதனானறிக. தமக்கமைந்த எண்வகைக் குணங்களுள், இவ்வருட் குணமே நம்பிரானுக்குரிய பராசக்தியாக வமையுமாயின், அதன் மாட்சியை எவ்வாறு பேசுவேன்! நம் பெருமானது இப்பேர‍ருள் வெளிக்கண்ணே, எல்லா