பக்கம்:சிவபிரான் கருணையுஞ் சீவர்கள் கடமையும்.pdf/13

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

10


னாக்கினை” யெனவும், “ஈர்த்தென்னை யாட்கொண்ட வெந்தை பெருமானே” யெனவும், “கல்லைப் பிசைந்து கனியாக்கித் தன்கருணை, வெள்ளத் தழுத்தி வினைகடிந்த வேதியனை”யெனவும், “இனையனானென் றுன்னை யறிவித்தென்னை யாட்கொண் டெம்பிரா னானாய்க்கு” எனவும் போந்த திருவாக்குக்களானுணர்க. அவ்வாறு அடிமை கொண்டு தங்கருணை யமுத‍த்தை யெவ்வா றூட்டினா ரெனின்; ஒன்றுமறியாக் குழவிப் பருவத்து மகவைத் தாய் அச்சமுறுத்தி யுணவூட்டுமா போலும், கல்லூரிக்கட்சென்று கல்வியின் மாட்சியுணராது கற்றற்கு மலைவுறும் சிறாரை யாசிரியன் அடித்துத் துன்புறுத்திக் கல்வியைப் புகட்டுமா போலும் ஊட்டினாரென்க.

இவ்வுண்மையையே நம் சுவாமிகள் “அடித்தடித்து வக்கார முன்றீற்றிய வற்புதமறியேனே ” என்று திருவாய் மலர்ந்தருளினார்கள். ஆதலின், “சர்க்கரை வழங்குதல்” என்பது போலச் சிறிதும் வருத்தமின்றி மகிழ்ச்சிமிக்கு இடையீடின்றிப் பெய்தல் கருதிக், கொடுத்தல் தருதல் முதலிய சொற்களை விடுத்து வழங்குதற் சொல்லாற்றொடுத்து, அவ்வாறு கருணையமுத‍த்தைப் பெய்து உண்ணுக உண்ணுக வென்று அடித்தடித்து வற்புறுத்துகின்ற நின்பொருட்டு அஞ்சியென்பார் வழங்குகின்றாய்க்கு எனவும் தன்னையுண்டாரைச் சிற்றின்புறுத்துந் தேவரமுதம் போலாது சிவபிரானருளமுதம் பேரின்புறுத்த வல்லதாகலின் உன்னரு ளாரமுத‍த்தையெனவும், இயற்கையாக வுண்டலின்றித் துன்புறுத்து நின்பொருட்டுமிக விரைந்துண்ணு கின்றேனென்பார் வாரிக்கொண்டு விழுங்குகின்றேனெனவும், அங்ஙனம் விரைந்து விழுங்குதலான் விக்கினேனெவும், வேண்டாத வுணவை யுண்டற்குத் தொடங்கு முன்னர்க் கண்டவளவிலேயே விக்கலுண்டாமாகலின், முறையே நிகழ்காலமுமிறந்த காலமுந் தோன்ற விழுங்குகின்றேன் விக்கினேனெனவும் அவ்வாறு விக்குதற்குக் காரண நீயல்லை; வினைவயப்படுழலும் எனது விதியே யென்பார் வினையினேன் விதியின்மையால் எனவும், யான் வேண்டாதிருப்பவும், என்னைத் துன்புறுத்தி யூட்டினையாதலின், அதனாலுண்டான விக்கலை யொழித்தற்குத் தண்ணீர் தந்து பிழைப்பித்தல் வேண்டுமென்பார் தண்ணீர் பருகத்தந்துய்யக் கொள்ளாயெனவும், அவ்வமுதம் நின்னருளமுத மாதலின், அதனையுண்