பக்கம்:சிவபிரான் கருணையுஞ் சீவர்கள் கடமையும்.pdf/15

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

12


மையை நன்கு புலப்படுத்‌தினார் போலும் . என்னே அவர் பெருங்கருணை மாட்சி! நினையுங்காலுள்ள முருகுகின்றதே!


(௪)அக்கருணையின்‌ வகை.

இனி, அப்பெருமான்‌ கருணைத்‌ திறம்‌ இருவகைப்படும்‌. அவை அறக்கருணை மறக்கருணை யென்பனவாம்‌. ஒரு தந்தைக்குரிய இருவர் மக்களுள், ஒருவன், “தந்தை சொன்மிக்க மந்திரமில்லை” என்றபடியே செவ்விய நெறிக்கண் ஒழுகுகின்றான். அவற்குத் தந்தை வேண்டுவன தந்து இன்புறுத்துகின்றார். மற்றொருவன் தந்தையுரை கடந்து தீயநெறிக்கட் செல்லுங்கா லவனைத் தந்தையடித்துத் துன்புறுத்தி நன்னெறிக்கட் செலுத்துகின்றான். இவ்விருவர் மக்களிடத்துச் செய்யுமிவ்விரு செயலும் அன்புபற்றியனவேயாகும். இங்ஙனமே நம் பரமபதியின் செயலுமாம். தம்மிடத்து அன்பு பூண்டு ஒழுகும் அடியார்களை யவருவப்பன செய்து இன்புறுத்துவர். அன்பின்றி யிருப்போரை யொறுத்து நன்னெறிக்கட் செல்லுமாறு அருள் பாலிப்பர்.

இவ்விரு செயற்கும் அவ்வான்மாக்களிடத்துத் தாம் வைத்த கருணையே காரணமாகும். இவற்றுள் முன்னையது அறக்கருணை யெனவும், பின்னையது மறக்கருணை யெனவும் கூறப்படும். நம்சமய நூல்களையும் உலகியலையும் அறியார் சிலர், “யாவர்க்கும் ஒப்பவிருத்தலன்றே கடவுளியல், அவ்வாறின்றிச் சிலர்க்கு இதஞ்செய்தலும், சிலர்க்கு அகிதம் செய்தலும் என்னை?” யென்பர். இவ்வுலக பரிபாலனஞ் செய்யும் அரசியலை நோக்கினும் இவ்வுண்மை மிகவெளிதிலறியத் தக்கதொன்றாம். இது கருதியே திருவள்ளுவ தேவரும் “அறத்திற்கே யன்புசார் பென்ப வறியார், மறத்திற்கு மஃதே துணை” என்று கூறினார். இத்திருக் குறளுக்கு மறத்தை நீக்குதற்கும் என்று ஆசிரியர பரிமேலழகர் உரை கூறினர். இதனினுஞ் செவ்வையாக அறத்தைச் செய்தற்கு அன்பு துணையாதல் போல ஏனை மறத்தைச் செய்தற்கும் அன்பு துணையாம் என்று கொண்டு இவ்விரண்டனுட் பின்னதையன்பு பற்றிய மறமெனக் கோடல் சிறப்புடைத்தென்பதுணர்க. இங்ஙனமே நாயன்மார்கள் செயலுமாம். நம் வைதிக சைவ சமய நெறியை யழிப்ப முற்பட்ட சமணர்கள் பாண்