பக்கம்:சிவபிரான் கருணையுஞ் சீவர்கள் கடமையும்.pdf/16

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

13


டியவரசனால் ஒறுக்கப்பட்டுக் கழுவேறுங்கால், அதனை விலக்காமையால் திருஞானசம்பந்த சுவாமிகள் கருணையிலரென்பர் ஒருசிலர். அன்னார், ஒருகுடி நலம்பெற வொருவனையும், ஓரூர் நலம்பெற ஒரு குடியையும், ஒரு தேயநலம்பெற ஓரூரையுங் கெடுத்துக் காத்தலறமாமென்று அறநூல் கூறுதலை முணர்ந்திலர்; “பொறையெனப் படுவ தாடவர் தமக்குப் பூணெனப் புகலினும் பொருந்தார், முறையறப் புரிந்தா லக்கணத் தவர்த முடித்தலை துணிப்பதே முழுப்பூண்” என்னு நீதியையு முணர்ந்திலர். இன்னும் பல பிரபல நியாயங்களுள வெனினும், அவையீண்டு வேண்டற் பாலனவல்லவாதலின், விரித்திலன். ஆகவே, சிவபிரான் செயல்கள் “எக்கிரமத்தினாலு மிறைசெய லருளே யென்றும்” என்றாங்குக் கருணை காரணமாகவுள்ளனவேயாம்.

(௫) அக்கருணையா லான்மாவெய்தும் பயன்.

இனி, அப்பெருமான் கருணையானுண்டாம் பயனைச் சிறிது கூறுவன். ஆன்மாக்களாதி கேவலத்தி லாணவமலத்தாற் பிணிப்புண்டு இருட்டறையிற் கிடக்கின்ற கண்ணிலாக்குழவிபோல நினைவு செயலற்றுக் கிடக்குங்கால் விவிதசக்திகளையுடைய அவ்வாணவமலத்தைக் கழுவுதற் பொருட்டுக் கன்ம‍மல மாயமலங்களை யவ்வவற்றிற் கேற்ப‍ப் பயனுறச்செய்து, சிறிது அறிவெழக்கண்டு, படைத்தன் முதலிய ஐந்தொழில்களையும் புரிந்து, இறுதியிற் றந்திருவடியின்பத்தை யீதற்குக்காரணம், தம் அளவிலாப் பெருங்கருணையேயாகும். இவ்வுண்மையை,

“அருளிற் பிறந்திட் டருளில் வளர்ந்திட்
டருளி லழிந்திளைப் பாறி மறைந்திட்
டருளான வானந்தத் தாரமு தூட்டி
யருளாலென் னந்தி யகம்புகுந் தானே”,

என்னுந் திருமந்திரமும் வலியுறுத்துவதாம். இனி, அப்பெருமானைக் காண்டற்கும் அவர்கருணையே கண்ணாதல் வேண்டும். கேநோபநிடத‍த்தில் “இந்திரன் இயக்க வடிவத்துடன் வந்த பரம்பொருளாகிய சிவபிரானை ஆங்குத் தோன்றிய உமாதேஇயாராகிய அருட்சக்தி”