பக்கம்:சிவபிரான் கருணையுஞ் சீவர்கள் கடமையும்.pdf/17

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

14


காட்டலாற் றெளிந்தான்” என்று கேட்கப்படுதலானும், “மெய்யருளாந் தாயுடன்சென்று பின்றாதையைக் கூடி” யென்று பட்டினத்தடிகள் அருளினமையானும், “அவனருளாலே யவன்றாள் வணங்கி” எனவும், “அவனருளே கண்ணாக‍க் காணினல்லான்” எனவும்போந்த திருவாக்குக்களானும் இவ்வுண்மை நன்குபுலனாம். “ஆதவ?னருளாற் பத்தி நன்குண்டாம்” என்றபடி இறைவனையடைதற்கு மிக முக்கியமான பத்தியும் அவனருள் வழியுண்டாமெனின்; வேறிதன் பயனை யெவ்வாறுரைப்பேன்! அப்பெருமான் பரங்கருணையின் பயனாக முடிவில் நாம் பெறத்தக்க பொருள் அப்பெருமானேயாகும். இதனினுஞ் சிறந்தபயன் யாதுளது? சிவநேசர்களே! இவ்வுலகத்தும் அவ்வுலகத்தும் விரைவிற் தோன்றி யழிதன்மாலையவாகிய சிற்றின்பந்தரும் பொருள்களைப் போலாது நித்தியானந்தவுருவமாகிய அவ்விறைவனேயே தருமாட்சிமிக்க அக்கருணையைப் பெறுதற்குரிய செயலையன்றி வேறுயாம் செயக்கிடப்பது யாதுளது? ஸ்ரீ மணிவாசகனாரும் “தந்ததுன் றன்னைக் கொண்டதென் றன்னைச் சங்கரா யார்கொலோ சதுர‍ர், அந்தமொன் றில்லா வானந்தம் பெற்றேன் யாதுநீ பெற்றதொன் றென்பால்” என்று இப்பேரானந்தப் பெருஞ்செல்வப் பேறு அவர் கருணையினாற் பெற்ற தம் அநுபவவுண்மையை நம்மனோரும் உய்ய வெளிப்படுத்தி யருளினார்கள். இத்திருவாக்கில் ஒரு பண்டமாற்றுச் செய்தியை நாம் அறிகின்றோம். அஃதாவது, எல்லாவறிவும் எல்லாவாற்றலும் நிறைந்த மலரகிதராகிய சிவபிரான் தம்மைக் கொடுத்துச் சிற்றறிவுஞ் சிறுதொழிலுமுடைய சீவனை யதற்கு மாற்றாக‍க் கொள்கிறாரென்பதே. அப்பெருமானைப் பெற்றமையாற் சீவன் எய்திய பயன் அளப்பிலாவானந்தம். இச்சீவனால் அவ்விறைவன் பெற்றது யாதுமின்று. என்னேயவர் கருணைத்திறம்! மனத்தானினைத்தற்கும் வாயாற் பேசற்கும் அளவுபடு தின்றாகலின், இம்மட்டிற் சிவபிரான் கருணையென்னும் பகுதியை நிறுத்தி மேற் சீவர்களின் கடமையைப்பற்றிச் சிறிது கூறுவேன்.

(௬) சீவர்களின்றன்மை.

ஆன்மா எப்பொருளைச் சார்ந்ததோ, அப்பொருளின் வண்ணமாந் தன்மையுடையதென்பது வேதாகம சித்தாந்தம். வெளி, இரு