பக்கம்:சிவபிரான் கருணையுஞ் சீவர்கள் கடமையும்.pdf/18

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

15


ளோடு கூடுங்காலிருளாகவும், ஒளியோடு கூடுங்கால் ஒளியாகவும் ஆதல்போல, ஒரு பளிங்கு, செந்நிறத்தைச் சார்ந்துழிச் செம்மையாகவும், கருநிறத்தைச் சார்ந்துழி கருமையாகவுந் தோன்றுதல் போலவும், ஆன்மா, மலவிருளிற் கலந்துழி அதன் மயமாகவும், சிவ விளக்கத்திற் பொருந்துழிச் சிவமயமாகவும் விளங்கும். அவ்வப்பொருளைச் சாருங்காற் பிரிப்பின்றி யத்துவித மாகவே சம்பந்தமுற்றுக் கலந்திருக்கும். மலத்தோடு சம்பந்தமுற்றுழி யந்நிலையும் அத்துவிதநிலையாமோவெனின், அதுவும், ஒன்றென்றாவது வேறென்றாவது கூறப்படாமையின் அத்துவிதமேயாம். இதனை “ஆணவத்தோ டத்துவித மானபடி மெய்ஞ்ஞானத், தாணுவினோ டத்துவிதஞ் சாருநா ளெந்நாளோ” என்னுந் தாயுமானார் திருவாக்கும் வலியுறுத்தும். ஆகவே தனக்கெனவொரு சுதந்தரமுமின்றிச் சார்ச்சிப்பொருள்களின் றன்மையே தன்றன்மையாக‍க் கோடல் ஆன்மாவி னிலக்கணங்களுண் முக்கியமானதொன்றாம். இன்னும் இச்சீவன் சகசமலமாகிய ஆணவத்தாற் பிணிப்புண்டு அதனீக்கத்தின்பொருட்டு இறைவனாற் றரப்பட்ட மாயாமல கன்ம மலங்களின் காரியங்களாகிய தநுகரண புவன போகங்களைப் பெற்று மாறி மாறிப் பிறக்கு மியல்புடையதாம். மனம் புத்தி யகங்காரஞ் சித்தமென்னும் அந்தக் கரணங்களாகிய கருவிகளாற் பொறிகளின் வாயிலாகப் புலன்களை நுகர்ந்து அதனான் மீண்டு மீண்டும் வந்தேறுகின்ற கன்மங்களையுடைத்தாம். இன்பந் தருவனவற்றில் விருப்பும், துன்பந்தருவனவற்றில் வெறுப்புமுடையதாகும். இன்னும் இவ்வான்மாவினிலக்கணம், வகை விரிகளாற் பல திறப்படும். அவை விரிந்த சைவநூல்களிற் காண்க.

(௭) கடமையின்‌ றன்மை.

இனி, கடமையாவது இன்னதெனச் சிறிது கூறுவேன். இவ்வுலகத்து அறிவுள்ள ஒவ்வொருவரும், நாம் செய்யவேண்டியவை யிவை யிவையென நூன்முகமாகவும், பெரியார் முகமாகவுமுணர்ந்து பிரதிப் பிரயோசனத்தைப் பற்றிச் சிந்தியாமல் மேற்கொள்ளுங் காரியங்களுள் இன்றியமையாது செய்யத்தக்கவே யெவையோ அவை கடமை யெனப்படும். நன்மாணாக்கனொருவன் ஆசிரியனொறுத்தல் கருதி வெறுப்புறாது, அவனாணை வழிநின்று கற்றுவருத