பக்கம்:சிவபிரான் கருணையுஞ் சீவர்கள் கடமையும்.pdf/21

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

18


தன் சோதரர்‌ சுற்றத்தாரிடத்துச்‌ செய்யும்‌ அன்புக்கும்‌ பேதமுண்‌டன்றோ? முன்னையது விசேட வன்பும்‌ பின்னையது சாமாநிய வன்புமாம்‌. விசேடவன்பை வேறோரிடத்துச் செய்யின், வியபிசரித்தற் குற்றம் வருதலோடு விசேடவிலக்கணமும் பிழைபடும். சாமாநியவன்பை யுரியசோதர‍ரிடத்துப்போன் மற்றையோரிடத்துஞ் செய்யலாம். அதனால் வருங்குற்றம் யாதுமின்றாம். அவ்வாறே நமது சமயக்கடவுளிடத்துச் செய்யும் பக்தி விசேஷமும், ஏனைத் தேவர்களிடத்துச் செய்யும் பக்தி சாமாநியமுமாம். ஆனால், அப்பெண்மகள் தன்னுயிர்க் காதலனைப் பாராட்டி யேனைச் சோதர‍ர் முதலியோரையு மிகழாது உபசரித்தல் போல நாமும் நம் சமயத் தெய்வத்தைப் பாராட்டுதலோடு மற்றைத் தேவர்களையு மிகழாது அவரவர்க் கேற்றவாறு உபசரித்துப் போற்றுதல் கடனாம். இவ்வாறு த‍த்தஞ்சமயத் தெய்வங்களிடத்து வைக்கும் விசேட வன்பே நல்லின்பந் துய்ப்பித்தற்குரியதாகும். இங்ஙனமின்றி யெல்லாஞ் சமஞ்சம‍மென்று கூறுவார் ஒன்றினு நிலைபெறாது தமக்குரிய ஆன்மலாபத்தை முடிவிலிழந்தவரே யாவர். சமய சாத்திர விசாரத்தால் த‍த்துவ நிலை யதிகார நிலை முதலிய தாரதம்மியங்களைக் கண்டுகூறல் அவரவர் அன்பு நிலைப்படுதற்குபயோக மாதலானும், முன்னைய சமயாசாரியர்களெல்லாரும் அங்ஙனங்கூறிப் போந்தமையானும், அது நிந்தையாகாது. நிந்தையாவது துரபிமானத்தால் உள்ளதை யில்லாதாகவும், இல்லதையுள்ளதாகவுங் கூறிப்பழித்தலேயாம். “உள்ளேன் பிறதெய்வ முன்னையல்லா தெங்களுத்தமனே” “கற்றறியேன் கலைஞானங் கசிந்துருகே னாயிடினு, மற்றறியேன் பிறதெய்வம்” என்னுந் திருவாக்குகள் நிந்ததையின்றி விசேடவன்பிலக்கணத்தை வெளிப்படுத்துதலுணர்க. ஆகவே, நாம் நம் பதியாகிய சிவபிரானிடத்து விசேடபக்தியாகிய உண்மையன்பு செய்தல் கடமையாம். இதர தெய்வங்களையும் உரியவாறு போற்றுதலைப் பற்றி விலக்கின்மையு முணர்தல் வேண்டும். அஃது அவரவர் மனநிலைக்கேற்ப மேற்கொள்ளத் தக்கதொன்றாம்.

இனி, சைவர்களாகிய நாம் நம் இறைவனை முறைப்படி வழிபடுதற்கு இன்றியமையாது மேற்கொள்ளத் தக்கது தீக்ஷையேயாகும். தீக்ஷையில்வழிப் பஞ்சாக்ஷர மகா மந்திர முதலியவற்றைச்