பக்கம்:சிவபிரான் கருணையுஞ் சீவர்கள் கடமையும்.pdf/22

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

19


செபித்தற்குக் கூடாமையானும், சரியை முதலிய நால்வகை நெறியொழுக்கம் பெறப்படாமையானும் அஃது இன்றியமையாத‍தொன்றேயாம்.. தீக்ஷையாவது, ஆன்மாக்களிடத்துள்ள சிவசக்தியை வெளிப்பட வொட்டாது தடையாக மறைத்து நிற்கும் மலசக்தியைக் கெடுத்துச் சிவத்துவத்தைக் கொடுப்பதாகிய சிவசக்திக்கிரியை யாகும். இதனை,

  • * *
  • * *
  • * *

எனவரும் பௌஷ்கராகமத்தானுமுணர்க. இன்னும் இத்தீக்ஷையினாலேயே மோக்ஷமுதலிய வெல்லா நலன்களுஞ் சித்திக்கு மென்னு முண்மையை வாயு சங்கிதை முதலிய புராணங்களானும், விரித்துக்கூறுஞ் சிவாகமங்களானு முணர்க. இத்தீக்ஷை பலதிறப்படும். அவற்றின் விளக்க விசேடங்களையெல்லாம் ஆகமங்களுட்டெளிவாக வுணரலாம். சமய தீக்ஷைபெற்று இறைவன் உருவத் திருமேனியைப் புறத்தொழின் மாத்திரையான் வழிபடுதலாகிய சரியையும், விசேடதீக்ஷைபெற்று அருவுருவத் திருமேனியை புறத்தொழிலகத்தொழிலிரண்டானும் வழிபடுதலாகிய கிரியையும், அருவத்திருமேனியை நோக்கி யகத்தொழின் மாத்திரையான் வழிபடுதலாகிய யோகமும், நிருவாண தீக்ஷைபெற்று இம்மூன்றனையுங் கடந்த ச‍ச்சிதானந்தப் பிழம்பாகிய இறைவன் சொரூபத்தை வழிபடுதலாகிய ஞானநிலையும் ஆகிய இந்நால்வகை மார்க்கங்களுள், தந்தகுதிக்கேற்பவியன்ற தொன்றை யநுட்டித்து வருதல் ஒவ்வோரான்மாக்களுக்கு முரிய கடமையாகும். அறநூல்களிற் கூறப்பட்ட ஜீவதயை, கொல்லாமை, புலாலுண்ணாமை, கட்காம நீத்தல் முதலிய வுயர்ந்த ஒழுக்கங்களெல்லாம் ஈண்டுக்கூறிய சைவ நெறிக்கணடங்குமாதலின், வேறாக விரித்திலன். வைதிக குலத்திற் பிறந்தாருள்ளுஞ் சில நவீன அறிவுடையோர், கிரியைகள் கேவல மௌட்டியர்களுக்கே யன்றி யறிவுடையார்க்கில்லை யெனவும், அறிவுடையார் உண்மையுணர்ந்து அந்தக்கரணங்களை மாத்திரந் திருத்திக் கோடல் போதிய தெனவுங் கூறி நித்திய கன்மங்களைப் பொருட்படுத்தாது காலத்தை வறிதே கழிக்கின்றனர். அவரெல்லாம், கன்மாநுட்டானங்களை