பக்கம்:சிவ வழிபாடு.pdf/67

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பொல்லா வினையேன் புகழுமாறு ஒன்று அறியேன். Pollaa vinaiyēn pugazhumaarru ondru arriyen, புல்லாகிப் பூடாய்ப் புழுவாய் மரமாகிப் Pullaagip pūdaayp puzhuvaay maramaagip பல்விருகம் ஆகிப் பறவையாய்ப் பாம்பாகிக் Palvirugam aagip parravaiyaayp paambaagik கல்லாய் மனிதராய்ப் பேயாய்க் கனங்களாய் Kallaay manidharaayp peyaayk gannanggallaay வல்அசுரர் ஆகி முனிவராய்த் தேவராய்ச் Val asurar aagi munivaraayth thevaraaych செல்லாஅ நின்றஇத் தாவர சங்கமத்துள் Sellaaa . nindraith thaavara sanggamaththull எல்லாப் பிறப்பும் பிறந்து இளைத்தேன்; எம்பெருமான்! Ellaap pirrappum pirrandhu illaiththen; emperumaan! மெய்யே, உன்பொன் அடிகள் கண்டு இன்று விடுற்றேன். Meyye; шпроп adigall kanndu indru vēdu utrēn; இறைவனே! நீ விண்முழுவதும் நிறைந்து இருக்கிறாய். நீ எல்லோரைக் காட்டிலும் மேல் ஆக இருக்கிறாய். நன்கு விளங்கும் உன் பெருமைக்கு எல்லை இல்லை. ஒளியாக இருக்கிறாய். நான் பொல்லாத வினைகளை உடையவன். உன் பெருமையையும் சிறப்பையும் எப்படிப் புகழ்வது என்று அறியாது இருக்கிறேன். புல், பூண்டு, புழு மரம், பலவகை மிருகம், பறவை, பாம்பு, கல், மனிதர், பேய், கணங்கள். வலிமை பொருந்திய அரக்கர், முனிவர் தேவர் என்று பலவிதமான பிறவிகள் உண்டு. இப்பிறவிகள் எல்லாம் எடுத்தேன் இளைத்தேன். இது உண்மை. உன் பொன் போன்ற திருவடிகளைக் கண்டு விடுதலை அடைந்தேன். O Lord! You pervade the Heaven and the earth. You are above all. You are the brightest light. Your glory, I man of evil deeds, do not know how to praise. The grass, the shrub, the worm and the trees, varied beasts, the birds and snakes, the stones, the men, the devil and the ganas, strong giants, ascetis and the celestials-so described are the movables and immovables. All these births l took and became exhausted. Oh my Lord! This is true of me! I saw Your golden Feet and attained salvation. 57

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சிவ_வழிபாடு.pdf/67&oldid=833643" இலிருந்து மீள்விக்கப்பட்டது