பக்கம்:சீதா கல்யாணம்.pdf/52

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

50 சீதா கல்யாணம்

வீச வீச வெதும்பினள் மென் முலை: - ஆசை நோய்க்கு மருந்தும் உண்டு, ஆம் கொலோ? (கலவைக் களி - வாசனைச் சாமான்கள் சேர்க்கப்பட்ட சந்தனக் குழம்பு) ... " - இவ்வாறு சீதை வருந்திக் கொண்டிருக்கும் பொழுது, அவளைக் கன்னி மாடத்தில் கண்ட விசுவா மித்திரர் ராம, லக்குமணர்கள், சனக மன்னனைக் காண, அவன் அவர்களை மிக்க பரிவுடன் வரவேற்று உபசரித்து, சிறந்த மாளிகையொன்றில் அமரச் செய்தான். அங்கே கெளதம முனிவருடைய புத்திர னாகிய சதாநந்தன் வந்து சேர்ந்தான். அம்முனிவனை இராமன் வணங்க, அவன் இராமனுக்கு ஆசி கூறி, விசுவாமித்திரரை உபசரித்தான். விசுவாமித் திரரும், இராமன் தாடகை வதம் முடித்ததையும், தம் யாகம் நிறைவேறியதையும், சதாநந்தன் தாயாராகிய அகலிகையின் சாபவிமோசனம் ஆனதையும் எடுத்துக் கூறி, அவன் பெருமையைப் பலபடப் பாராட்டிப் பேசினார்: -

'வடித்த மாதவ, கேட்டி! இவ்வள்ளல்தான் இடித்த வெங்குரல் தாடகை யாக்கையும், அடுத்துஎன் வேள்வியும், நின் அன்னை சாபமும் முடித்து, என் நெஞ்சத்து இடர் முடித்தான் என்றான், வடித்த-திருந்திய கேட்டி - கேட்பாயாக) இப்படி விசுவாமித்திரர் கூறியதைக் கேட்ட சதாநந் தன், 'உம்முடைய அருளைப் பெற்ற வீரர்களுக்குச் செய்வதற்கு அரியது என்று ஏதாவது காரியம் உண்டா?’ என்று முனிவரது அருள் வலியைப்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சீதா_கல்யாணம்.pdf/52&oldid=651217" இலிருந்து மீள்விக்கப்பட்டது