பக்கம்:சீதா கல்யாணம்.pdf/53

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தொ.மு.பாஸ்கரத் தொண்டைமான் • 51

பாராட்டினான்.இராமனுக்கு முனிவரது பெருமையை எடுத்துரைக்கும் வியாசமாக, அவர் அரசராயிருந்தது, பின்னர் வசிட்டரிடம் காமதேனுவைக் கேட்டு அவர் கொடாததால் அவரோடு பகைமை கொண்டு போர் செய்தது, விசுவாமித்திரரது படை வலிமையெல்லாம் வசிட்டர் தவ மகிமையின் முன்னால் வலியற்றுப் போனது, பின்னர் அவரும் அத்தகைய எஞ்சாத பலம் அடையத் தவம் செய்தது, அதனால் பெருமை பெற்றது முதலான விசுவாமித்திரரது வாழ்க்கையையே விரிவாக எடுத் துரைத்து, அவரிடம் வில்வித்தை பயிலும் பாக்கியம் பெற்ற இராமனையும் வாழ்த்திப் பின் தன் இருப்பிடம் சென்றான். - .

இராமனைப் பிரிந்த சீதைதான் தாபத்தால் வருத்த முற்றாள் என்றால், இராமனும் அவ்வாறே, அவளைக் கண்டு பின் பிரிந்ததால் பெரிய ஏக்கமுறுகிறான். இரவெல்லாம் எப்பொழுதும் அவனுக்குச் சீதையின் ஞாபகந்தான்; கண்ட கண்ட இடமெல்லாம் அவனுக்குச் சீதையின் உருவே தென்படுகின்றது. - முனியும் தம்பியும் மொய்ம் முறையால் தமக்கு

இனிய பள்ளிகள் எய்திய பின், இருள் கனியும் போல்பவன், கங்குலும், திங்களும், தனியும், தானும், அத்தையலும் ஆயினான். (மொய்ம் முறை - மிக உயர்ந்த முறை. இருள் கனியும் போல் பவன்-மிக இருண்டநிறத்தினன். கங்குல்-இரவு)

விண்ணில் நீங்கிய மின் உரு, இம் முறை பெண்ணின் நல் நலம் பெற்றது உண்டே, கொலோ?

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சீதா_கல்யாணம்.pdf/53&oldid=651220" இலிருந்து மீள்விக்கப்பட்டது