பக்கம்:சீதா கல்யாணம்.pdf/58

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

56 சீதா கல்யாணம்

விரிந்திடு தீவினை செய்த வெவ்விய தீவினையாலும், அருங் கடை இல் மறை அறைந்த அறம் செய்த அறத்தாலும், இருங்கடகக் கரதலத்து எழுது அரிய திருமேனிக் கருங் கடலைச் செங்கனி வாய்க் கவுசலை என்பாள்

. பயந்தாள்

(வெவ்விய தீவினை - கொடிய பாவம். கடகம் - வளையல் கரதலம் - கை. பயந்தாள்- பெற்றாள்)

'தள்ள அரிய பெரு நீதித் தனி ஆறு புக மண்டும் பள்ளம் எனும் தகையானை, பரதன் எனும் பெயரானை, எள் அரிய குணத்தாலும் எழிலாலும் இவ்விருந்த வள்ளலையே அனையானைக் கேகயர்கோன் மகள்

... -- பயந்தாள் (தள்ள அரிய - விலக்குவதற்கு முடியாத, எழில் - அழகு) . * . . .

இந்த நான்கு குமாரர்களும், கல்வி கேள்விகளில் சிறந்தவர்களாயும், தனுர்வேதம் நன்றாய்க் கற்றவர் களாயும் நாளொருமேனியும் பொழுதொரு வண்ணமு மாக வளர்ந்து வந்தார்கள். . . தலை ஆய பேருணர்வின் கலைமகட்குத் தலைவராய், சிலை ஆயும் தனு வேதம் தெவ்வரைப் போல் பணிசெய்ய கலை ஆழிக் கதிர்த் திங்கள் உதயத்தில் கலித்து ஓங்கும் அலை ஆழி என வளர்ந்தார் மறை நான்கும் அனையார்கள். (பேருணர்வு - முதிர்ந்த அறிவு. தலைவராய் - மேம்பட்டவர்களாய், தெவ்வர் - பகைவர் கலித்து - ஒலித்து) . . - * - - -

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சீதா_கல்யாணம்.pdf/58&oldid=651232" இலிருந்து மீள்விக்கப்பட்டது