பக்கம்:சீதா கல்யாணம்.pdf/62

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

60 சீதா கல்யாணம்

(உய்ய - வாழ்வு பெற. பிணங்குவன - சண்டை செய்தன. கணம் - திரட்சியான குழை - குண்டலம், அணங்கு - தெய்வப் பெண் ஆகிய கங்கை)

நீரிலே பிறந்த திருமகளை விண்ணவர் எல்லாரும் காதலித்தது போல, நிலத்திலே பிறந்த இந்தத் திருமகளையும் மன்னரெல்லோரும் காதலித்து மணம் பேசி வந்தார்கள். நாங்களோ அவர்களுக்கு, இவ் வில்லை வளைத்தவர்களே இவளை மணக்கத் தகுதி யுடையவர் என்று சொல்லிவிட்டோம். அம்மன்னர் களாலோ வில்லை வளைக்க முடியவில்லை. சனக னுடன் போர் செய்து வெல்லவோ திறனில்லை. வந்த வர் எல்லோரும் தோற்றோடிப் போய் விட்டார்கள். 'அன்று முதல் இன்று அளவும் ஆரும் இந்தச் சிலையருகு சென்றும் இலர்; போய் ஒளித்த தேர் வேந்தர்திரிந்தும் இலர்; என்றும் இனி மணம் இல்லை என்று இருந்தோம்; இவன் ஏற்றின் நன்று, மலர்க்குழல் சீதை நலம் பழுதாகாது என்றான்.

(திரிந்தும் இலர்-திரும்பிவரவில்லை. ஏற்றின்-நாண் ஏற்றினானானால், நலம் - அழகு),

இவ்வாறு சதாநந்தன் கூறியதை யெல்லாம் கேட் டார் விசுவாமித்திரர். தமது சீடனான இராமன் இப்பணயத்தில் எப்படியும் வெற்றி பெற்று விடுவான் என்று நம்பினார். அந்தப் பெருமிதத்துடனே இராமனை ஏறிட்டு நோக்கினார். உடனே இராமனும், முனிவர் நினைத்ததையெல்லாம் குறிப்பால் தெரிந்து கொண்டு, அவ் வில்லை நோக்கினான்.

நினைந்த முனி பகர்ந்த எலாம்

நெறி உன்னி, அறிவனும் தன்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சீதா_கல்யாணம்.pdf/62&oldid=651242" இலிருந்து மீள்விக்கப்பட்டது