பக்கம்:சீதா கல்யாணம்.pdf/69

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தொ.மு. பாஸ்கரத் தொண்டைமான் 67

இப்படிச் சென்ற தசரதனது சேனா வீரரும் பிறரும் சந்திர சைலச் சாரலைச் சார்ந்து அங்குள்ள மலை வளங்களைக் கண்டுகளிக்கிறார்கள்.இவ்வீரர் ஒட்டிய தேரின் பொன் சக்கரங்கள் உருண்டு உருண்டு கருங்கல் பாறைகளும் பொன்னிறமாகி விடுகின்றன. காலாள், குதிரை, யானை முதலிய படைகள் செல்வதினால் எழுந்த தூசி படிந்த மாதர் மேனியை அவர்களது காதலர் வெண்ணிற ஆடை கொண்டு துடைத்தது, மாசு படிந்த ஒவியத்தைப் புதுக்கியது போல் இருந்தது.

மிதிக்க நிமிர் தூளியின் விளக்கம் அறும் மெய்யை சுதைக் கண் நுரையைப் பொருவு தூசு கொடு துசை உதிர்த்தனர் இளங் குமரர். ஒவியர், இன் ஒவம் புதுக்கினர் என, தருண மங்கையர் பொலிந்தார். துளி - தூள். சுதை - பால். தூசு - ஆடை ஒவம் - சித்திரம். தருணம் - இளமை) . . மாதர்கள் குயிலொடு பேசியும், மலையொடு கூவி எதிர் ஒலி கேட்டும், மயில் போலத் திரிந்தார்கள். மைந்தர்களோ, தங்களுடைய வீரக்கழல் சப்திக்கும் படியும், அரையிலே வாளும் தோளிலேயுள்ள வாகுவலயமும் பிரகாசிக்கும்படியும், அங்குமிங்கும் திரிந்து மலைக்காட்சிகளை அனுபவித்தார்கள். இப்படி இவர்கள் இம்மலையிலே தங்கியிருந்த பொழுது மாலை நேரம் வந்தது.மாலை நேரம் கழியும் போது, இவர்கள் மலையினின்றும் கீழே இறங்கினார் கள். இர்வெல்லாம் ஒரே களியாட்டம்தான். மாதர் களுடைய ஆடலும் பாடலும் மைந்தர்களுக்கு அள விறந்த உற்சாகத்தை உண்டாக்கின. -

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சீதா_கல்யாணம்.pdf/69&oldid=651259" இலிருந்து மீள்விக்கப்பட்டது