பக்கம்:சீதைக்கு ஒரு பொன்மான்.pdf/100

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

98


'நீ தந்தி கொடுத்து, நான் கேதத்துக்கு வந்திருந்தப்போ, உனக்கு எப்படிச் சமாதானம் சொல்கிறதென்றே புரியல்லே. அப்புறம், எர்ணுகுளத்திலேயிருந்து திரும்பி வர முடியல்லே; பட்டணத்திலே ஒரு சோலி உண்டு. வழியிலே அச்சாபீஸிலே விசாரிச்சேன். விலாசம் வாங்கிக்கிட்டு வந்தேன். குழந்தை எப்படி இருக்கான்'

இருக்கான்; என்னவோ ஒரு தினுசா காலம் ஒடிக்கிட்டு இருக்குதப்பா!’

  • சுமதி கையிலே ஒட்டிக்கிட்டான பயல்?”

-ஒ!’ என்று பதிலிறுத்தான் சுந்தர். பிரபு, உனக்குச் சுமதியைத் தெரிந்திருக்கும். இவர் மிஸ்டர் குமார், எங்க குடும்ப நண்பர்”, என்று பிரபுவிடம் குமாரை அறிமுகப் படுத்தினன். மிஸ்டர் குமார், இவர் என்னுடைய பால்ய காலத் தோழர். கேரளத்திலே எர்ணுகுளத்தில் தொழில் பண்ணுகிருர், இடுக்கி பகுதியில் ஒரு சின்ன ஏலக்காய்த் தோட்டம் வச்சிருக்கார். என் மேலே அன்பையும் பாசத்தையும் மட்டும் வைத்திருக்கவில்லை; உயிரையே வைத்திருக்கிறவராக்கும்!’ என்று குமாரிடம் பிரபுவைப் பற்றி விவரித்தான் சுந்தர்.

பிரபுவுக்கு ஹார்லிக்ஸ் கிடைத்தது; வேறு விசேஷம் உண்டா?’ என்று வினவினன்.

'இப்போதைக்கு ஒரு விசேஷமும் இல்லை, பிரபு!”

"நான் புறப்படுறேன்; ஒருதரம் நீ, குழந்தை, சுமதி எல்லோருமாக மலையாளத்துக்கு வந்து திரும்புறதுதானே? மாறுபட்ட சூழ்நிலை உனக்கு-உங்களுக்கு ஒரு மாறுதலாக இருக்குமே?”

'பார்க்கலாம்!”

விடைபெற்றுக் கொண்டான் பிரபு.