பக்கம்:சீதைக்கு ஒரு பொன்மான்.pdf/101

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

99


குமார், காலம் இருக்கிற இருப்பிலே, ஆட்களை யார் நல்லவன், யார் கெட்டவன் என்று தரம் பிரிச்சுப் பார்க் கிறதே பகீரதப் பிரயத்தனமாயிருக்குது. ஆன, பிரபு ஒரு தனிப் பிறவி' என்ருன் சுந்தர்.

சரிதான்', என்று சொல்வி, சுமதி, உட்காருவது தானே?’ என்று வேண்டிக்கொண்டான் குமார். காதற் காண்டத்தின் தேனமுத நிகழ்ச்சிகள் நிழலாடி யிருக்கலாம்.

சுந்தர் கேட்டுக் கொண்டதற்கு அப்புறம்தான் சுமதி உட்காரலாஞள்.

குமாரின் சலனம் அடைந்திருந்த முக விலாசம் சிறுத்தது. மிஸ்டர் சுந்தர், உங்களுக்காக அற்புதமான பச்சை இலைத்துள் சூரணம் ஒன்று கொண்டாந்திருக்கேன்; ரொம்ப ரொம்ப உயர்வான மருந்து. ஒரு மண்டலம் தேனிலே குழைச்சுச் சாப்பிட்டால், உங்களுக்கு ஏற்பட்ட நஷ்டத்தினலே-இழப்பினலே ஏற்பட்டிருக்கிற மனக் கஷ்டம், குழப்பம், சலனம், சோர்வு எல்லாம் இருந்த இடமும் தடமும் தெரியாத வகையிலே பஞ்சாய்ப் பறந்து போயிடும். நீங்க புதுப் பிறப்பு எடுத்தமாதிரி ஆயிடுவிங்க என்ன நம்புங்க, சுந்தர்,” என்று நெகிழ்ச்சியோடு உரைத்தான்.

சுந்தரின் சலனம் அடைந்த மனம் நொடியில்தன்நிலைக்கு வந்தது; குமார், நீங்க என் பேரிலே கொண்டிருக்கிற உண்மையான அன்பைத் தலைவணங்கி ஏற்றுக்கிறேன். உங்களை எப்பவும் நம்ப வேண்டியவன். ஆனால், நான் என் சுசீலாவின் பேரிழப்பினலே என்னுள்ளே தோன்றித் தோன்றி. மறைகிற அந்த மனக் கஷ்டத்தையோ, மனச்சோர்வையோ, குழப்பத்தையோ மருந்தைத் தின்னு போக்கிக்கிட நான் விரும்பமாட்டேன். ஏன், தெரியுங்களா? என் மனைவி சுசீலா என் மட்டுக்கும் இறந்து விட்டதாய் நான் எப்போதுமே நம்பவில்லையாக்கும்!” என்ருன். சோகத்தின் சுருதி து.ாக்கலாக இருந்தது.