பக்கம்:சீதைக்கு ஒரு பொன்மான்.pdf/102

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

106;

குமார் மேலும் கலங்கினன். உங்க இஷ்டம்; அது போகட்டும். என்னே உடனே புறப்பட்டு வரும்படி தந்தி அடிச்சிங்களே?-ஏதானும் விசேஷம் உண்டா?’ என்று ஆர்வத்தைக் கட்டுப்படுத்த முடியாமல் கேட்டான்; அவன் ஆண்கள் பாதாதிகேசமாகச் சுமதியை ரசித்துக் கொண்டி ருந்தன.

சுந்தர் மெளனப் பிண்டமாக இருந்தான்,

சுமதி தலையை உயர்த்தி நிமிர்த்தினுள். "மிஸ்டர் குமார், எனக்கு என்ைேட சுசீலா அக்காதான் அசல் தெய்வம் என்கிற உண்மை உங்களுக்கு நல்லாத் தெரியும். அக்கா கண்ணே மூடுறதுக்குமுந்தி, என் கையிலே என்ைேட அன்பான அத்தானை ஒப்படைச்சிட்டுது; அதனலே, நம் காதல் கனவு இனி செல்லாக்காசுதான். நான் உங்களை மறந்து வெகுநாள் ஆயிடுச்சு; அதுமாதிரி நீங்களும் என்ன மறப்பதும் மறக்க வேண்டியதும்தான் தர்மநியாயம். இந்தச் சேதியைச் சொல்லத்தான் உங்களை அழைச்சோம்! என்னைத் தயவுசெஞ்சு மன்னிச்சிடுங்க, குமார்!’-தீர்ப்பு வழங்கி விட்டாள் சுமதி.

'சுமதி!' மண்முட்டி, விண்முட்ட அலறிவிட்ட குமார் அப்படியே வெறும் சிலேயெனச் சமைந்து போனன்!-சுமதி: டார்லிங் சுமதி!'-கண்கள் தளும்பின.

என்னையும் நீங்க மன்னிக்கணும், குமார்!’

நல்ல பூமியில் நிலவும் அமைதி அங்கு சில கணங்கள் நிலவியது;-அமைதி ஏன் இப்படிப் பயமுறுத்துகிறது?

கைமுறுக்கைப் பறிகொடுத்த கைக்குழந்தை ஊமைத் தனமாக, உள்வட்டம் கிழித்துச் செருமுமே, அப்படி ஆளுன் குமார். கம்பீரமாக நிமிர்ந்திருத்த முகம் ஏமாற்றத்தின் அதிர்ச்சியால் தாழ்ந்தது. அன்புச் சுமதி! நீ உன்னைக் கொம்புத்தேனக ஆக்கிக்கொண்டு விட்டாயே? என் பாக்கி யத்திற்குப் பொருள் கிட்டாமல் செய்து விட்டாயே?... நீ